புதிய தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி-க்கு வரும் 11-ம் தேதி பதவி பிரமாணம்!

news18
Updated: November 8, 2019, 1:09 PM IST
புதிய தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி-க்கு வரும் 11-ம் தேதி பதவி பிரமாணம்!
ஏ.பி.சஹி
news18
Updated: November 8, 2019, 1:09 PM IST
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி சாஹி-க்கு வரும் 11-ம் தேதி தமிழக ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணி ராஜினாமா செய்ததை அடுத்து பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார்.

இதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாகவும், சுதந்திர இந்தியாவின் 30-வது தலைமை நீநிபதியாகவும் ஏ.பி சாஹி வரும் 11-ம் தேதி பதவி ஏற்று கொள்கிறார்..


வரும் 11-ம் தேதி காலை 9:20 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் ஏ.பி சாஹிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

பின்னர் 11:30 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Also see...

Loading...

First published: November 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...