மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய உறவினர் போக்சோ சட்டத்தில் கைது

மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய உறவினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுள்ளார்.

மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய உறவினர் போக்சோ சட்டத்தில் கைது
மாதிரிப்படம்
  • Share this:
மயிலாடுதுறை அருகே திருவெண்காடு பஞ்சந்தாங்கி தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் அருண் (26). இவர் டைல்ஸ் வேலை பார்த்து வருகிறார். பக்கத்து ஊரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவரும் வேளையில் அந்த வீட்டில் இருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

சிறுமிக்கு நேற்று முன்தினம் வயிற்று வலி ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 5 மாத கர்ப்பம் என்று தெரிவித்தனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

Also read: பாஜக தலைமை மீது வருத்தமா? - நயினார் நாகேந்திரன் புது விளக்கம்


விசாரணையில் அருண் தொடர்ந்து 9 மாத காலமாக சிறுமியை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அருண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து கைதுசெய்து காவலில் அடைத்தனர்.
First published: August 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading