தாய் முன்னிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை... 2 பேர் கைது

கத்தி முனையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய் முன்னிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை... 2 பேர் கைது
பாலியல் வன்கொடுமை...2 பேர் கைது
  • Share this:
சென்னை டி.பி.சத்திரத்தில் கடந்த 12ம் தேதி 22 வயது மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது தாயார் முன்னிலையிலேயே ரவுடி லிங்கன், ஆனந்த், ராஜ் குமார் ஆகிய மூன்று பேர் சேர்ந்து கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என மகளிர் அமைப்பினரும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினரும் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். மேலும், மாநில மனித உரிமை ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து மூன்று வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தேடப்பட்ட குற்றவாளிகளான ஆனந்த் மற்றும் ராஜ்குமார் மீது, கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான ரவுடி லிங்கம் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading