• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • ஃபேஸ்புக்கில் அவதூறு.. செல்போனில் ஆபாச பேச்சு - பெண்ணுக்கு தாயின் இரண்டாவது கணவர் கொடுத்த தொல்லை

ஃபேஸ்புக்கில் அவதூறு.. செல்போனில் ஆபாச பேச்சு - பெண்ணுக்கு தாயின் இரண்டாவது கணவர் கொடுத்த தொல்லை

கைதான ராஜேஷ்

கைதான ராஜேஷ்

மகள் ஸ்தானத்தில் பார்க்க வேண்டிய தனது தாயின் 2 வது கணவர் செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசும் ஆடியோவை அந்தபெண் காவல்நிலையத்தில் அளித்துள்ளார்.

 • Share this:
  அம்பத்தூரில் பெற்ற மகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய தாய் தனது 2 வது கணவருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

  சென்னை அம்பத்தூர், எம்ஜிஆர் புரம், திருப்பதி குடை ரோட்டை சேர்ந்தவர் துர்காதேவி (33). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதில் எனக்கும் திருவல்லிக்கேணியை சேர்ந்த பழனி என்பவருக்கும் 2006ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு ஆகாஷ்( 13), தீபக் (11) என இரு மகன்கள் உள்ளனர். நான் தனியார் இன்சூரன்ஸ் அலுவலகம் வைத்து நடத்தி வருகிறேன். எனக்கும், கணவர் பழனிக்கும் கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை அடுத்து நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்கிறோம். எங்களது விவாகரத்து வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

  இதற்கிடையில், எனக்கு சிறு வயது இருக்கும் போதே எனது அம்மா அமுதபிரியா(51), எனது அப்பா ராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.பின்னர் அவர் தி.நகர், கண்ணம்மா பேட்டை, புதுத்தெருவைச் சார்ந்த ராஜேஷ் (52) என்பவருடன் 25 ஆண்டாக குடும்பம் நடத்தி வருகிறார்.

  Also Read: தூத்துக்குடி அருகே பேஸ்புக், வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிட்ட தங்கையை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த அண்ணன்!

  இதற்கிடையில், ராஜேஷ் கடந்த ஒரு மாதமாக என்னை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுகிறார். அப்போது, அவர் என்னிடம் "நீ தனியாக இருக்க வேண்டாம். என்னுடன் வந்து விடு. உனது அம்மாவுக்கு வயதாகிவிட்டது. எனவே, உன்னை நான் வைத்து குடும்பம் நடத்துகிறேன் என கூறுகிறார். இதனால் அதிர்ச்சியடைந்த, துர்கா தேவி நீங்கள் எனக்கு அப்பா ஸ்தானம். இப்படி அசிங்கமாக பேசலாமா என கூறி எதிர்ப்பு தெரிவித்தேன் ஆனாலும், அவர் என்னை விடாமால் ஆசை வார்த்தைக்கு இணங்க வற்புறுத்துகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இது குறித்து, சமீபத்தில் நான் ராஜேஷ் மீது அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தேன்.
  இதனையடுத்து போலீசார் ராஜேஷ், எனது அம்மா அமுத பிரியா ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தினர் அப்போது, அவர்கள் இருவரும் வருத்தம் தெரிவித்து விட்டு இனி மேல் எந்த தவறும் நடக்காது என கூறி மன்னிப்பு கேட்டு சென்றனர்.

  இதன்பிறகு, ராஜேஷும், எனது அம்மா அமுதபிரியாவும் சேர்ந்து யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் என்னை பற்றி தவறாக பதிவுகளை வெளியிட்டு அவதூறு பரப்பி வருகிறார்கள்.

  இந்த தகவலை நான் எனது தோழிகள் மூலம் தெரிந்து கொண்டேன். இது குறித்து,நான் அவர்கள் இருவருடன் கேட்டபோது,அவர்கள் என்னை அசிங்கமாக பேசி அடித்துஉதைத்தனர்.
  மேலும், அவர்கள் இருவரும் சேர்ந்து என்னை கொன்று விடுவதாக மிரட்டி வருகிறார்கள். எனவே என்னை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூராக தவறான பதிவுகளை வெளியிட்டும், அடித்து கொடுமைப்படுத்திய அவர்கள் இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் புகாரில் கூறியிருந்தார்.

  இதனையடுத்து, அம்பத்தூர் காவல் உதவி ஆணையர்  கனகராஜ், ஆய்வாளர் (பொறுப்பு) ராஜி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  பின்னர், போலீசார் ராஜேஷ், அமுதபிரியா ஆகிய இருவரையும் இன்று மாலை கைது செய்தனர். இதன் பிறகு, போலீசார் அவர்கள் இருவரையும் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்
  ஆனால் அமுத பிரியா விற்கு கேன்சர் உள்ளது என  சொந்த ஜாமினில்  உடனே வெளியே வந்துள்ளார். ராஜேஷ் மீது 4பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து  புழல் சிறையில் அடைத்தனர்.

  அம்பத்தூர் செய்தியாளர் : கன்னியப்பன்


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: