தமிழகத்தில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த முருகேஷ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட தகவல்களுக்கு, கூடுதல் காவல் துறை இயக்குநர் மற்றும் மாநில குற்ற ஆவண காப்பகம் அளித்துள்ள தகவல்களின மூலம் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
பள்ளிகளிலும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பு கடந்த 2006ம் ஆண்டு 2 ஆக இருந்த குற்றங்களின் எண்ணிக்கை 2019ம் ஆண்டு 35ஆக உயர்வு.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நம் நாட்டில் அதிகரித்து வருவது கவலை தரக்கூடிய அம்சமாக உள்ளது. தமிழகத்திலும் இந்த எண்ணிக்கை கடந்த 20ஆண்டுகளில் அதிகரித்துள்ளது
பள்ளிகளில் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை பாலியல் ரீதியான குற்றங்கள் எதும் பதிவு செய்யப்படவில்லை. அதேசமயத்தில் 2006 ம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 2பாலியல்.குற்றங்கள் மட்டும் பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த 20ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை அதிகரித்து கடந்த 2019ம் ஆண்டு வரை 35 குற்றங்கள் நடைபெற்றதாக பதிவாகியிருக்கின்றது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் பள்ளிகளில் பாலியல் வன்முறையும், மாணவர்கள் மீதான துன்புறுத்தலும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
Also read... சாஃப்ட்வேர் நிறுவன ஊழியர் எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...
மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சிறுவர்களுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2004ஆம் ஆண்டில் 166ஆக இருந்த சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் 2019ஆம் ஆண்டு 2,410ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, 2014ஆம் ஆண்டுக்கு பின்னர் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதை மாநில குற்ற ஆவண பதிவேட்டில் இருந்து அளிக்கப்பட்ட தகவல்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.
பள்ளிகளில் பயிலும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தல் அதிகரித்துள்ளது பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.