சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொண்டாதாக மாணவர்கள் போராட்டம்

Youtube Video

தொல்லியல் துறை மாணவியிடம் துறை பேராசிரியர் தவறாக நடந்து கொண்டார் எனப் புகார் தெரிவித்து மாணவர்கள், 3 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 • Share this:
  தனது மதிப்பெண்ணை வாய்வார்த்தையாக சொல்லாமல், அறிவிப்பு பலகையில் வெளியிடும்படி கோரிய மாணவியிடம் துறை பேராசிரியர் பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொண்டார் என்கின்றனர் சென்னைப் பல்கலை மாணவர்கள். ஆனால் நிர்வாகமோ மறுக்கிறது. நடந்தது என்ன?

  சென்னை பல்கலைக்கழகத்தில் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை செயல்பட்டு வருகிறது. துறையின் தலைவராக பேராசிரியர் சவுந்திரராஜன் பணியாற்றி வருகிறார். 3 ஆண்டு படிப்பு வழங்கப்படும் தொல்லியல் துறையில், மொத்தம் 80 மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களில் 25 மாணவர்கள் இறுதியாண்டு பயின்று வருகின்றனர்.

  கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் துறை பேராசிரியர் சௌந்தரராஜன் குறைவான மதிப்பெண்களை வழங்கியதாகவும் அதை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தால், 8 மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

  இந்தத் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை பேராசிரியர் வெளியிடவில்லை என்றும் மாறாக கிரேடு பற்றி மட்டும் வாய்மொழியாகத் தகவல் தெரிவித்தார் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனது மதிப்பெண்கள் எவ்வளவு என்பதை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என இறுதியாண்டு மாணவி ஒருவர் பேராசிரியரிடம் கேட்டுள்ளார்.

  அப்போது நடந்த வாக்குவாதத்தில்தான் பேராசிரியர் தன்னிடம் பாலியல் ரீதியாக வன்முறையில் ஈடுபட்டார் என்றும் மாணவி குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து மாணவர்கள் கடந்த 17ம் தேதி முதல் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  மேலும் படிக்க...தேர்தல் களத்தில் வாரிசுகள்... வாரிசு அரசியலை ஆரம்பித்தது யார்?

  மாணவர்களின் புகாரின் பேரில் பல்கலைக்கழக நிர்வாகம் ஒரு கமிட்டி அமைத்து விசாரணை நடத்தியுள்ளது. ஆனால் அதிலும் சரியாக விசாரிக்கவில்லை என்று மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாணவர்களின் குற்றச்சாட்டு மற்றும் புகார் குறித்து, பேராசிரியர் சவுந்திரராஜனிடம் கேட்டபோது, மாணவர்கள் தன்னைப் பலிகடா ஆக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக மறுத்தார்.

  மேலும் படிக்க...கட்சிக்கு துரோகம் செய்தால் தூக்கி எறியப்படுவீர்கள்...

  அதேநேரம், பல்கலைக்கழக துணைவேந்தர் கெளரியிடம் கேட்டபோது, இருதரப்பிலும் தவறுகள் இருப்பதாகவும் அதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மாணவர்கள் குற்றச்சாட்டு உண்மையா? பல்கலைக்கழக நிர்வாகம் கூறுவது உண்மையா? உண்மை வெளிவருமா?
  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: