பாலியல் புகாருக்கு ஆதாரம் கேட்ட அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் - பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டு

அண்ணா பல்கலைக்கழகம்

 • Share this:
  அண்ணா பல்கலைக்கழக்ததில் ஆராய்ச்சி மாணவிகளுக்கு பேராசிரியகர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

  அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவிகளுக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளித்தும் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

  2019-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட பாலியல் தொந்தரவு புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். மாணவிகள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகளை விசாரிக்கும் போஸ் கமிட்டியிடம் இது தொடர்பாக புகார் அளித்தும் அவர்கள் விசாரிக்க மறுத்துவிட்டதாக மாணவி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் உரிய ஆதாரத்துடன் மீண்டும் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் பல்கலைக்கழக பேராசிரியர்களால் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்து விளக்கமளித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: