சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை : பெரியப்பா & ஆட்டோ ஒட்டுநர் போக்சோவில் கைது

போக்சோவில் கைது செய்யப்பட்டவர்கள்

புரசைவாக்கம் பகுதியை சார்ந்த பெரியப்பா உறவு முறை கொண்ட விஸ்வநாதன் 46 என்பவர் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறியுள்ளார்.

  • Share this:
சென்னையில்  13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பெரியப்பா முறை கொண்ட நபரும், 9 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று முட்புதரில் பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் ஆகிய இருவர் இன்று ஒரே நாளில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, பெரியமேடு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாததால் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது, சிறுமி நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பெற்றோர்கள் கேட்டபோது, புரசைவாக்கம் பகுதியை சார்ந்த பெரியப்பா உறவு முறை கொண்ட விஸ்வநாதன் 46 என்பவர் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறியுள்ளார்.

இதையடுத்து  சிறுமியின் பெற்றோர்  உடனடியாக வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் புரசைவாக்கம் பகுதியில் அமரர் ஊர்தியை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வருகிறார் விஸ்வநாதன்.

Also read : பெண் போலீசை பாலியல் வன்புணர்வு செய்த மாமனார்..  கேள்விப்பட்டு முத்தலாக் கொடுத்த போலீஸ் கணவர்!

தனது மகள் முறை கொண்ட சிறுமியை கடந்த ஒரு வருட காலமாக கொலை மிரட்டல் விடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததும், அதனால் சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாகி இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து வேப்பேரி அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

அதேபோல கோயம்பேடு பகுதியில் நேற்று இரவு  9 வயது சிறுமி வீட்டிற்கு மாவு வாங்கிக்கொண்டு சாலையில் நடந்து செல்லும் போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முதியவர் முரளிதரன்(56) என்பவர் சிறுமியை ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளார். கோயம்பேடு பகுதியில் உள்ள இருட்டு பகுதியில் உள்ள முட்புதரில் வைத்து சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பயந்து போன சிறுமி முதியவரை தள்ளிவிட்டு அங்கு இருந்து தப்பித்து ஒடி வருவதை பார்த்த பொது மக்கள் சிறுமியை மடக்கி கேட்டனர்.

Also read : கணவரின் பிறப்புறுப்பை துண்டாக்கிய 2வது மனைவி: 3வது திருமணம் செய்ய நினைத்ததால் வெறிச்செயல்!

அப்போது சிறுமி  நடந்ததை அழுதுகொண்டு கூறியதை அடுத்து ஆத்திரம் அடைந்த  பொதுமக்கள் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற முதியவரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் இந்த வழக்கை விசாரணை செய்தனர். சிறுமியிடம் நடத்திய விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் முரளிதரன் சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என தெரிய வந்தது.

இதனையடுத்து, முரளிதரன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2019ஆம் ஆண்டு மாதவரத்தில் ஒரு சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ வழக்கில் சிறைக்கு சென்று வந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் முரளிதரனை சிறையில் அடைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: