பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை - தாசில்தார் சஸ்பெண்ட்

பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை

சிவகங்கை மாவட்டத்தில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 • Share this:
  சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்பு இல்லாத புன்செய் பகுதிகள் மனைவாடகை பகுதி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளை அளவீடு செய்து பட்டா வழங்குவதற்காக காரைக்குடியில் மனைவாடகை பின்தொடர்பணி (ஜி.ஆர்) தனி தாசில்தார் அலுவலகம் சூடாமணிபுரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது.

  இந்த அலுவலகத்தில் தனி தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் மகாதேவன் இவர் தனக்கு கீழ் பணிபுரியும் பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் புகார் கொடுத்தனர்.

  இதையடுத்து மாவட்ட சமூக நல அலுவலர் வசந்தா தலைமையில் குழு அமைக்கப்பட்டு தொடர் விசாரணையில் புகார் உண்மையென தெரியவந்தது. இதையடுத்து தனி தாசில்தார் மகாதேவனை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.  மேலும் அலுவலகத்திற்கு பட்டா மாறுதல் கேட்டு வருபவர்களிடம் லஞ்சம் பெற தனக்கு ஏஜென்டாக இருவரை நியமித்து சர்வாதிகாரி போல செய்பட்டதும் விசாரனையில் தெரிய வந்துள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published: