சிறுமியை கர்ப்பமாக்கிய தாய்மாமன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

சிறுமியின் பெற்றோர் ராஜன் உறவினர் என்பதால் இந்த சம்பவத்தை மூடி மறைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: July 2, 2019, 4:46 PM IST
சிறுமியை கர்ப்பமாக்கிய தாய்மாமன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: July 2, 2019, 4:46 PM IST
பல்லாவரம் அருகே 16 வயது சிறுமியை அவரது தாய்மாமாவே பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாகியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம் போலீசார் ராஜனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த பல்லாவரம் குளக்கரை தெருவைச் சேர்ந்த ராஜன் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். அவர் வசிக்கும் பகுதியில் அவருடைய மாமாவும் குடும்பத்துடன் இருந்துள்ளார். அவருக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில், அந்தச் சிறுமியை தாய்மாமாவான ராஜன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதில் அந்தச் சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். ஆனால் அவர் கர்ப்பம் ஆனது 4 மாதங்களுக்குப் பிறகே அவரது பெற்றோருக்கு தெரியவந்ததுள்ளது.

பின்னர் சிறுமியின் பெற்றோர் ராஜன் உறவினர் என்பதால் இந்தச் சம்பவத்தை மூடி மறைத்தனர். தற்பொழுது சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அந்தச் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் அவரது வயதை கண்டுபிடித்து மருத்துவமனையின் சார்பில் தாம்பரம் மகளிர் போலீசாருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.

இந்தத் தகவலை ஆராய்ந்து உண்மை என்று தெரிய வந்தவுடன் தாம்பரம் போலீசார் ராஜனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

மேலும் படிக்க... போதையில் ரகளை செய்த இந்து முன்னணி முன்னாள் நிர்வாகி சுரேஷ் கைது

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...