ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

6 முறை கருக்கலைப்பு.. தீயில் கருகி பெண் பலி.. கோவையில் நடந்த கொடூரம்

6 முறை கருக்கலைப்பு.. தீயில் கருகி பெண் பலி.. கோவையில் நடந்த கொடூரம்

6 முறை கருக்கலைப்பு.. தீயில் கருகி பெண் பலி.. கோவையில் நடந்த கொடூரம்

Sexual Harassment | கோவையில் டைல்ஸ் கடை உரிமையாளர் மீது பாலியல் புகார் கூறிய பெண் தீ காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஈரோடு மாவட்டம், பவானி, கர்ணபுரம் ஐந்தாவது வீதியை சேர்ந்தவர் 37 வயதான மலர். திருமணமான இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், பவானியில் கணபதி சிமெண்ட் & டைல்ஸ் என்ற கடையில் பத்து ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடை உரிமையாளர் நவநீதன் அடிக்கடி பாலியல்தொல்லை கொடுத்து வந்ததாக மலர் குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக மலர் கடந்த மாதம் ஒரு செல்பி வீடியோவை வெளியிட்டார். அதில் மலர் டைல்ஸ் கடைக்குள் நின்றபடி  உரிமையாளர் நவநீதன் முன்பு செல்போனில் வீடியோ பதிவு செய்திருந்தார்.

  தன்னை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய பார்க்கிறார்கள் என்றும், 6 முறை கருக்கலைப்பு செய்து விட்டேன் என்றும் அந்த வீடியோவில் குற்றம்சாட்டியிருந்தார். தனக்கு கடை உரிமையாளர் நவநீதன் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது அவரது மனைவிக்கும் தெரியும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். அப்போது ஆத்திரமடைந்த நவநீதன் மலரை தாக்கி அவரிடம் இருந்து செல்போனை பறிக்க முயல்கிறார். இந்த காட்சிகள் அந்த செல்பி வீடியோவில் பதிவாகியிருந்தன.

  இந்த சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மலர், கோவை ஆர்எஸ் புரத்தில் உள்ள நவநீதனின் வீட்டிற்கு அவர்கள் வீட்டார் உதவிக்கு அழைத்ததாகக் கூறிச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் மலரின் அலறல் சத்தம் வீட்டின் உள்ளிருந்து கேட்டுள்ளது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது மலர் தீயில் எரிந்த நிலையில் அலறிக் கொண்டிருந்தார்.

  Read More : இருசக்கர வாகனத்தில் முதல்வர் கான்வாயை முந்தி சென்ற நபர் கைது..

   அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இதனிடையே மலரை திட்டமிட்டு கொலை செய்ய முயன்றதாக மலரின் குடும்பத்தார் குற்றம்சாட்டினர். நவநீதனின் மனைவி அகிலாதான் பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்து உள்ளார் என்றும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

  இந்த சூழலில் மலர் முன்னமே எழுதி வைத்த கடிதம் போலீசாரிடம்

  சிக்கியது. அதில், வறுமையின் காரணமாக வேலைக்குச் சென்ற தன்னை தனது குடும்ப சூழலை பயன்படுத்தி, நவநீதன் பாலியல் ரீதியில் பயன்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது சாவுக்கு நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலாதான் காரணம் என்றும்  குறிப்பிட்டுள்ளார். தன்னைப் போன்ற அப்பாவிப்  பெண்கள், நவநீதன் போன்ற முதலாளிகளிடம் சிக்கி வாழ்வை இழக்கக் கூடாது என்பதற்காகவே இந்த கடிதத்தை எழுதுவதாகவும் அதில் மலர் தெரிவித்துள்ளார்.

  மலரின் இந்த நிலைக்கு காரணமான நவநீதன் மீது முதல்கட்டமாக பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் தீக்காய பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மலர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை மாலை உயிரிழந்தார். மலர் இறப்புக்கு காரணமான டைல்ஸ் கடை உரிமையாளர் மீது இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் உயிரிழந்த மலரின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

  இந்நிலையில், பெண் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் கடையின் உரிமையாளர் நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலா மீது ஆர்.எஸ்.புரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.  தலைமறைவான இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Coimbatore, Crime News, Tamilnadu