பாஜக அலுவலகத்தில் எழும் பாலியல் புகார்கள்; அக்கட்சி எந்த திசையில் பயணிக்கிறது என்பதை காட்டுகிறது: கோபண்ணா விமர்சனம்

பாஜக அலுவலகத்தில் எழும் பாலியல் புகார்கள்.. அக்கட்சி எந்த திசையில் பயணிக்கிறது என்பதை காட்டுகிறது: கோபண்ணா விமர்சனம்

பாஜக தலைமை அலுவலகத்தில் இத்தகைய பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவது மிகுந்த வேதனையை அளிப்பதாக கூறியுள்ளார்.

  • Share this:
    பா.ஜ.க அலுவலகத்தில் எழும் பாலியல் புகார்கள் அக்கட்சி எந்த திசையில் பயணிக்கிறது என்பதை காட்டுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் கோபண்ணா விமர்சித்துள்ளார்.

    மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரஞ்சன்குமார் ஏற்பாட்டின் பேரில் ராகுல் காந்தி பிறந்த நாளன்று ஆக்சிஜன் செறிவூட்டிகள், முகக் கவசம் கிருமி நாசினி உள்ளிட்ட மருத்துவ தொகுப்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் வழங்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அந்த மருத்துவ தொகுப்பு உபகரணங்களை, சென்னை மருத்துவ இயக்குநர் செல்வ விநாயகத்திடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் கோபண்ணா வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோபண்ணா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கும் அமைச்சரவை கொரோனா தொற்றை ஒழிக்கும் பணியில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளதாக தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    குறிப்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அனைத்து அமைச்சர்களையும் விட மிக சிறப்பாகவும் கடுமையாகவும் உழைத்து கொரோனா தொற்று எண்ணிக்கையை குறைக்கும் பணியில் வெற்றிப் பெற்றிருப்பதாக கூறினார்.

    பாஜக அலுவலகத்தில் விசாகா கமிட்டி அமைக்கப்படும் என தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கோபண்ணா, கமலாலயம் பாலியல் தொல்லைக்கு ஆளாக்க படுகின்ற அலுவலகமாக மாறிவருகிறது என விமர்சித்தார்.

    பாஜக தலைமை அலுவலகத்தில் இத்தகைய பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவது மிகுந்த வேதனையை அளிப்பதாக கூறினார். பாஜக எந்த திசையில் சென்று கொண்டிருப்பது என்பதற்கு இந்த ஒரு நிகழ்வை உதாரணமாக சொல்லலாம் என கோபண்ணா தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published: