சிறுமி பாலியல் புகாரில் சிறையில் உள்ள முன்னாள் M.L.A நாஞ்சில் முருகேசனின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. நாகர்கோவிலில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தது தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் மற்றும் சிறுமியின் தாயார் உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
Also read: தந்தையை கொன்றவரை கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்த இளைஞர்
இந்நிலையில் ஜாமீன் வழங்க கோரி நாஞ்சில் முருகேசன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். ஜாமின் மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி இளந்திரையன், அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முருகேசனின் ஜாமின்மனு இரண்டாவது முறையாக நிராகரிக்கப்படுகிறது.