• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மாணவிக்கு பாலியல் தொல்லை.. தற்காப்பு பயிற்சியாளர் கெபிராஜுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

மாணவிக்கு பாலியல் தொல்லை.. தற்காப்பு பயிற்சியாளர் கெபிராஜுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

பயிற்சியாளர் கெபிராஜ்

பயிற்சியாளர் கெபிராஜ்

இரண்டு நாள் கஷ்டடியில் பல முக்கிய தகவல்கள் சிக்கியுள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தகவல்.

  • Share this:
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பயிற்சியாளர் கெபிராஜ் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா நகர் பகுதியில் கெபிராஜ் என்பவர் தற்காப்புக்கலை பயிற்சி நடத்தி வந்தார்.  கேரளாவைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் இவரிடம் பயிற்சி பெற்று வந்தார்.  மாணவியை நாமக்கல் மாவட்டத்திற்கு போட்டிக்காக அழைத்து சென்றுவிட்டு வரும் வழியில் தனது காரில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பயிற்சி மாணவி புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காவல் துறையினர் கெபிராஜ் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கடந்த 30 ஆம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கெபிராஜிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கெபிராஜ் மீது புகார் அளித்த மாணவி வேறு மாநிலம் என்பதையும், குற்றம் நடந்தது நாமக்கல் மாவட்டம் என்பதையும் கருத்தில் கொண்டு இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 4 ஆம் தேதி சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விசாரணையைத் துவங்கிய சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை அதிகாரியாக ஆய்வாளர் லதா-வை நியமித்தனர். கெபிராஜின் நீதிமன்ற காவல் வரும் 14 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் கெபிராஜை விசாரணைக்காக நேற்று 2 நாள் காவலில் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் எடுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: ஓ மை காட்... திமிங்கலத்தின் வாயிலா இருக்கேன் - மீனவரின் திக் திக் நிமிடங்கள்

விசாரணையின் ஒரு பகுதியாக இன்று பாலியல் தொல்லை நடந்ததாக கூறப்பட்ட இடங்களுக்கு கெபிராஜை அழைத்துச் சென்று நேரடி விசாரணையை சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கெபிராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா நகர் இரண்டாவது அவென்யூவில் நடத்தி வந்த தற்காப்புக் கலை பயிற்சி மையம், அண்ணா நகர் எச். பிளாக்கில் உள்ள அவரின் வீடு, வீட்டின் மேல் தளத்தில் தற்போது இயங்கும் அலுவலகம் மற்றும் பயிற்சி மையம் ஆகிய இடங்களுக்கு கெபிராஜை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது அவரது அலுவலகத்தில் இருந்த கணிணி சி.பி.யூ உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர். சம்பவ இடங்களில் நடத்தப்படும் விசாரணை முழுவதையும், புகைப்படம் மற்றும் வீடியோ பதிவாக்கி வழக்கிற்கு தேவையான ஆதாரங்களை சேர்க்க சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் புகார் அளித்த பெண்ணிடம் விசாரணை நடத்தவும் சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும் கெபிராஜ் இதே போல் வேறு பயிற்சி மாணவிகளிடமும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் தற்போது சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இரண்டு நாள் காவல் முடிந்து சிபிசிஐடி போலீசார் இன்று மாலை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர். கெபிராஜூக்கான 14 நாட்கள் நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவடையும் நிலையில் வருகின்ற 25 ம் தேதி வரை மீண்டும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டு தற்காப்பு பயிற்சியாளர் கெபிராஜ் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: