சின்மயி விவகாரம்: குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் - தமிழிசை

சின்மயி விவகாரம்: குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் - தமிழிசை
தமிழிசை சவுந்தரராஜன்
  • News18
  • Last Updated: October 11, 2018, 9:02 AM IST
  • Share this:
பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். தமிழகத்தில் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லம் குரல் கொடுப்பவர்கள், ஒரு பெண் பாதிக்கப்படும் போது ஏன் குரல் கொடுப்பதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் பெண்களாக இருக்கும் பட்சத்தில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்துவதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் கூட்டங்களை நடத்தி வருகின்றோம். பாஜக தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாகவும், அதற்காக எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


மேலும், தமிழகத்தில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு நிச்சயமாக உதவி செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.
First published: October 11, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading