Home /News /tamil-nadu /

பேருந்தில் பாலியல் சீண்டல்.. ஊக்கு மூலம் தக்க பாடம் புகட்டிய பெண்

பேருந்தில் பாலியல் சீண்டல்.. ஊக்கு மூலம் தக்க பாடம் புகட்டிய பெண்

பேருந்தில் பாலியல் சீண்டல்

பேருந்தில் பாலியல் சீண்டல்

பாதிப்புக்கு உள்ளாகிய பெண் தனக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல் கொடுமையை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.  அத்துடன் பாலியல் சீண்டல் செய்ய வந்த நபரின் கைகளில் ஊக்கால் குத்தி உள்ளார்.

    பேருந்தில் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற நபருக்கு பெண் வழக்கறிஞர்  ஊக்கு மூலம் பாடம் புகட்டினார். இந்த சம்பவம் தொடர்பாக பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

    வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தை சேர்ந்தவர் 28 வயதுடைய பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில்  வேலூருக்கு, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்தில் தனது தாயுடன் சென்றுள்ளார்.

    பெண் பயணம் மேற்கொண்டது இடைநில்லா பேருந்து என்பதால் நடத்துநர் இல்லாமல் பேருந்து புறப்பட்டுள்ளது.  பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் பெண் அமர்ந்திருந்த முன் இருக்கையில் இருந்து நீண்டு வந்த கை ஒன்று பெண் மீது தொட்டுள்ளது. இதை கவணித்த பெண் முதலில் தனது செல்போனால் தட்டிவிட்டுள்ளார்.

    ஆனாலும் அடங்காத முன் இருக்கையில் இருந்த நபர் மீண்டும் இருக்கையின் இடுக்கு வழியாக பெண்ணை தொட முயன்றுள்ளார்.  இந்த முறை சுதாரித்துக்கொண்ட பெண் தனக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல் கொடுமையை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.  அத்துடன் பாலியல் சீண்டல் செய்ய வந்த நபரின் கைகளில் ஊக்கால் குத்தி தன்னை பாதுகாத்துக்கொண்டுள்ளார்.



    இதையடுத்து,  அந்த நபர் பெண்ணை ஆபாசமாக பேசி அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.  பெண் கூச்சலிட்டதை தொடர்ந்து பேருந்து மதுரவாயல் காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்டு போலீசாருக்கு புகார் கொடுக்கப்ட்டுள்ளது.

    இதையும் படிங்க: தேவைப்பட்டால் பப்ஜி மதனுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவு


    பெண்ணின் புகாரை தொடர்ந்து உடனே வழக்குப்பதிவு செய்த போலீசார் , பெண்ணிடம் பாலியர் சீண்டலில் ஈடுபட்ட கிருஷ்ணகிரியை சேர்ந்த 40 வயதான ராகவனை கைது செய்தனர் . பெண்கள் தங்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்களை பொருத்து சகித்து செல்லாமல் எதிர்த்து கேட்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் கேட்டுக்கொண்டுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Bus, Crime News, Sexual harassment

    அடுத்த செய்தி