• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெண்களுடன் உல்லாசம், மசாஜ்... சென்னையில் பிரபல கிளப் மீது பகீர் புகார்

பெண்களுடன் உல்லாசம், மசாஜ்... சென்னையில் பிரபல கிளப் மீது பகீர் புகார்

பெண்களோடு சர்வீஸ் என்ற பெயரில் மசாஜ் செய்து கொள்ளலாம் என கிளப்பின் பெண் நிர்வாகி ஆசை வார்த்தை காட்டி பேசிய ஆடியோவும் வெளியாகியுள்ளது.

  • Share this:
    சென்னை தியாகராயர் நகரில் செயல்படும் கிளப் ஒன்றில் ஆயுட்கால உறுப்பினரானால் சகல வசதிகளும் இலவசம்,பெண்களோடு உல்லாசமாக இருக்கலாம் எனக் கூறி பண மோசடி செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. புகார்கள் அளித்த பின்னரும் போலீசார் சமரசம் பேசி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    சென்னை அபிபுல்லா சாலையில் சிட்டி கிளப் எனும் சக்தி ரீகிரியேஷன் சென்டர் என்ற பெயரில் ஒரு கிளப் இயங்கி வருகிறது. இந்த கிளப்பில் உறுப்பினர்களாக இணைந்தால் பார், ஸ்பா, தங்கும் விடுதி, உடற்பயிற்சி கூடம், குடும்ப சுற்றுலா என பல வசதிகள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. அதற்கு ஆயுட்கால உறுப்பினராக இணைய 40 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர், பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், ஐந்தாயிரம் ரூபாய் செலுத்தினால், குடும்பத்துடன் சுற்றுலா சலுகை வழங்கப்படும் என சிட்டி கிளப்பில் இருந்து தன்னைத் தொடர்பு கொண்டு கூறியதாகத் தெரிவித்துள்ளார். அதை நம்பி, ஐந்தாயிரம் ரூபாய் செலுத்திய நிலையில் மேலும் பல சலுகைகள் இருப்பதாக ஆசைவார்த்தை கூறி ஒரு லட்சம் ரூபாய் வரை வசூலித்த பின்னர் குறிப்பிட்ட சலுகைகளைத் தராமல் மோசடி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    Also Read : பாலியல் புகாரில் சிக்கிய அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் - ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

    இதுகுறித்து பாண்டி பஜார் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், அங்குள்ள குற்றப் பிரிவு உதவி ஆய்வாளர் , சமரசத்திற்கு அழைப்பதாகவும் மறுத்தால், நீதிமன்றத்தை நாடுமாறு கூறி புகாரை முடித்து வைக்கப் போவதாக மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக உதவி ஆய்வாளர் பேசிய ஆடியோவும் வெளியாகியுள்ளது. இதேபோன்று சங்கர் என்ற நபரும், தன்னிடம் 31 ஆயிரம் ரூபாய் பறிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். தியாகராய நகரிலும் வடபழனியிலும் கிளப்புக்கு சொந்தமான இடங்களில் கிளப் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களோடு சர்வீஸ் என்ற பெயரில் மசாஜ் செய்து கொள்ளலாம் எனவும் உல்லாசமாக இருந்து கொள்ளலாம் எனவும் கிளப்பின் பெண் நிர்வாகி ஆசை வார்த்தை காட்டி, சங்கருடன் பேசிய ஆடியோவும் வெளியாகியுள்ளது.



    மேலும் ஈசிஆரில் உள்ள சொகுசு விடுதியிலோ அல்லது பட்டினப்பாக்கத்தில் கிளப்புக்கு சொந்தமான இடத்திலோ சர்வீஸ் என்ற பெயரில் பெண்களோடு உல்லாசமாக இருக்க வேண்டுமென்றால் லிங்க் ஒன்றை வாடிக்கையாளருக்கு அனுப்புவதாகவும், அதன் மூலம் பெண்களை தேர்ந்தெடுத்து வரவழைத்துக் கொண்டு உல்லாசமாக இருக்கலாம் எனவும் கூறி பணத்தை பறிக்க முயல்வதாக சங்கர் ஆடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கிளப் நிர்வாகத்திடம் இதுகுறித்து கேட்டபோது, கிளப்பின் விதிகள் தெரிந்து தான் பணம் செலுத்துகிறார்கள் எனவும், பணத்தை திருப்பிக் கொடுக்க இயலாது எனவும் கூறுகின்றனர். மேலும் அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக கிளப்பில் எதுவும் நடக்கவில்லை என்றும் கூறுகின்றனர். இருப்பினும் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் சமரசம் பேசுவதிலேயே குறியாக இருப்பதால், காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்துவதன் மூலம் உண்மை வெளியே வரும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: