• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விசாரணை முடியாமல் ஜாமீன் வழங்க முடியாது.. பாலியல் வழக்கில் கைதான ராஜகோபாலன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

விசாரணை முடியாமல் ஜாமீன் வழங்க முடியாது.. பாலியல் வழக்கில் கைதான ராஜகோபாலன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

கைதான ராஜகோபாலன்

கைதான ராஜகோபாலன்

தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ராஜகோபால் சார்பில் தாக்கல் செய்த மனு போக்சா சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

  • Share this:
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வணிகவியல் ஆசிரியராக பணியாற்றிய ராஜகோபால் அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், ஆன்லைன் வகுப்புகளில் ஆபாசமாக நடந்து கொண்டதாக வெளியான புகாரையடுத்து கே.கே.நகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கடந்த மாதம் 24 ஆம் தேதி அவரை கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ராஜகோபாலனை ஜூன் 8 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை போக்சா சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.பின்னர் ராஜகோபாலனை போலீஸ் காவலில்எடுத்து விசாரிக்க கோரி மனுவையும் ஏற்ற நீதிமன்றம், 3 நாட்கள் அவரை காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து 3 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ராஜகோபால் சார்பில் தாக்கல் செய்த மனு போக்சா சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறையினரின் விசாரணை தற்போது ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது எனவும் விசாரணை இன்னும் முழுமையாக முடியாததால் ராஜகோபாலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Also Read:‘பண்றதெல்லாம் பண்ணிட்டு முழிக்கிறதை பாரு..’- பிடிஆர் போஸ்டும் ட்விட்டர்வாசிகளின் ரியாக்‌ஷனும்

ராஜகோபால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்நோக்கத்துடன் தன் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும் ஏற்கனவே காவல்துறை தன்னை காவலில் எடுத்து விசாரித்து விட்ட நிலையில், ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கபட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, காவல்துறையினரின் விசாரணை இன்னும் முழுமையாக நிறைவடையாததால் தற்போதைய நிலையில் ஜாமின் வழங்க முடியாது என தெரிவித்து ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: