• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பயங்கரமான குற்றம்! உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பயங்கரமான குற்றம்! உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

குழந்தைக்கு நேர்ந்த அவலத்தை அம்பலப்படுத்த எந்த பெற்றோரும் விரும்புவதில்லை எனவும் குறிப்பிட்ட நீதிபதி, 2 நாட்கள் தாமதமாக புகார் அளித்ததை குறையாக கூற முடியாது எனச் சுட்டிக் காட்டினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை விட, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை என்பது மிகவும் பயங்கரமான குற்றம் எனத் தெரிவித்துள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரைச் சேர்ந்த கணபதி என்பவர், அப்பகுதியில் உள்ள தேவாலயத்தின் முன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 2011-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர், 28-ம் தேதி நாகூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நாகப்பட்டினம் மகளிர் நீதிமன்றம், கணபதிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 2014-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கணபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், சம்பவம் நடந்ததும் உடனடியாக காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க செல்வார்கள் என எதிர்பார்க்க முடியாது எனவும், குழந்தைக்கு நேர்ந்த அவலத்தை அம்பலப்படுத்த எந்த பெற்றோரும் விரும்புவதில்லை எனவும் குறிப்பிட்ட நீதிபதி, 2 நாட்கள் தாமதமாக புகார் அளித்ததை குறையாக கூற முடியாது எனச் சுட்டிக் காட்டினார்.

    பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தையின் வாக்குமூலத்தையே நீதிமன்றங்கள் நம்பும் எனவும், பெற்றோரின் வற்புறுத்தலுக்காக குழந்தைகள் பொய் புகார் தெரிவிப்பதாக தவறான கருத்து நிலவுவதாகக் கூறிய நீதிபதி, ஐந்து வயது சிறுமி பொய் சொல்ல எந்த காரணமும் இல்லை என தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

    பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை விட, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை என்பது மிகவும் பயங்கரமான குற்றம் எனக் கூறி, கணபதிக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: