Home /News /tamil-nadu /

லாட்ஜில் பாலியல் தொழில்: 2 இளம்பெண்கள், 2 புரோக்கர்கள் கைது

லாட்ஜில் பாலியல் தொழில்: 2 இளம்பெண்கள், 2 புரோக்கர்கள் கைது

சேர்ந்த ரீகன் (33), செல்வராக் (51).

சேர்ந்த ரீகன் (33), செல்வராக் (51).

விழுப்புரம் அருகே தனியார் தங்கும் விடுதியில் பாலியல் தொழில் செய்ததாக இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரை விக்கிர்வாண்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, தேசிய நெடுஞ்சாலை அருகில் இயங்கி வரும் ஜீவன் ரெசிடென்சி எனும் தனியார் தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில், தனியார் விடுதியில் சோதனை மேற்கொண்ட விக்கிரவாண்டி காவல்துறையினர், இடைத்தரகர்களாகச் செயல்பட்டு விடுதிக்கு பெண்களை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபத்திய விழுப்புரம் சேவியர் காலனி பகுதியைச் சேர்ந்த ரீகன் (33), தென்புதூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராக் (51) இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.



    மேலும், முண்டியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரியா (32), சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த மோகனபிரியா (20) என்ற இரு பெண்களையும் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விக்கிரவாண்டி காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
    Published by:Rizwan
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Prostitution, Villupuram

    அடுத்த செய்தி