ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கு: ராமநாதபுரம் விரைந்த தனிப்படை போலீசார்!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கு: ராமநாதபுரம் விரைந்த தனிப்படை போலீசார்!

சாந்தினி

சாந்தினி

மதுரையில் இருந்து மணிகண்டன் சென்னை வந்தாரா? வேறு எங்கேனும் சென்றாரா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் குறித்த ஆதராங்களை திரட்ட தனிப்படை போலீசார் இராமநாதபுரம் சென்றுள்ளனர்.

மலேசியாவைச் சேர்ந்த சினிமா நடிகை ஒருவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது கொடுத்த பாலியல் புகாரில், பாலியல் வன்கொடுமை, கட்டாய கருக்கலைப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்த ஆதாரங்களை திரட்டி வரும் அடையாறு மகளிர் போலீசார், சாட்சியங்களை திரட்டும் பணியிலும் ஈடுப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் வழக்கு பதியும் போதும் குடும்பத்துடன் மதுரையில் இருந்துள்ளார். அதற்கு பிறகு அவரது குடும்பத்தினர் மட்டும் ராமநாதபுரம் திரும்பிய நிலையில், மணிகண்டன் எங்கு சென்றார் என தெரியவில்லை.

இந்த நிலையில், சென்னையில் இருந்து ராமநாதபுரம் விரைந்துள்ள தனிப்படை போலீசார் இவ்வழக்கு தொடர்பான ஆதாரங்களை திரட்ட திட்டமிட்டுள்ளனர்.

Also Read:   3வது அலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முன்மாதிரியாக திகழும் டெல்லி மருத்துவமனைகள்!

இராமேஸ்வரத்தில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் மணிகண்டன் அடிக்கடி சென்று தங்கியிருப்பார் என கூறும் காவல் துறையினர், அங்கு சென்று விசாரணை நடத்த உள்ளனர்.  மருத்துவரான மணிகண்டன் நடிகை கருத்தரிக்கமால் இருக்கவும், கருவை கலைக்கவும் இராமநாதபுரத்தில் இருந்து தான் மாத்திரைகளை வரவழைத்து கட்டாயப்படுத்தி தருவார் என நடிகை புகாரில் குறிப்பிட்டிருந்தார்.  அது குறித்து விசாரிக்கவும்,

மேலும், மணிகண்டன் குடும்பத்தினர்,  அவரது உதவியாளர்களிடம் விசாரணை நடத்தவும் தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Also Read:   உலகின் முதல் அந்தரத்தில் மிதக்கும் நீச்சல் குளம் - வைரலாகும் வீடியோ!

உதவியாளர்களின் செல்போன் எண்களுக்கு மணிகண்டன் அவ்வப்போது பேசியுள்ளார் என்பதை கண்டுபிடித்துள்ள போலீசார், மதுரையில் இருந்து மணிகண்டன் சென்னை வந்தாரா? வேறு எங்கேனும் சென்றாரா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Ramanathapuram, Rape, Sexual harassment