பாதாள சாக்கடை மரணங்களுக்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு- உயர் நீதிமன்றம்

பாதாள சாக்கடை மரணங்களுக்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு- உயர் நீதிமன்றம்

கோப்பு படம்

பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யச் செய்யும் மனித தன்மையற்ற செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

  • Share this:
பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும்போது ஏற்படும் மரணங்களுக்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாதாள சாக்கடை, கழிவு நீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யச் செய்யும் மனித தன்மையற்ற செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

கழிவு நீரை சுத்தம் செய்யும்போது மரணங்கள் நிகழ்ந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி ஆணையர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு, உடனடி கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்க செய்யும் நடைமுறையை தடுத்து நிறுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  பின்னர் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
Published by:Vijay R
First published: