Home /News /tamil-nadu /

சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் போராட்டம்... பொதுமக்கள் அவதி

சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் போராட்டம்... பொதுமக்கள் அவதி


கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் போராட்டம்

கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் போராட்டம்

கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக வீடுகள், ஓட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவுநீரை உரிய முறையில் வெளியேற்ற முடியாமல் பொதுமக்கள் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது.

    கும்மிடிப்பூண்டி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பொன்னேரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கழிவு நீர் கொண்டு செல்லும் வாகனங்கள் கழிவுநீரை திருமழிசை பேரூராட்சி மற்றும் ஆவடி மாநகராட்சியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் வழியாக வெளியேற்ற வேண்டும். அவ்வாறு இல்லாமல் கழிவு நீரை ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலோ, சாலைகளின் ஒரங்களிலோ வெளியேற்றக்கூடாது. அவ்வாறு விதிமுறைகளை மீறி வெளியேற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம்  அறிவித்துள்ளது.

    இந்நிலையில் கும்முடிபூண்டி வட்டார கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்களது லாரி உள்ளிட்ட கழிவு நீர் வாகனங்களை இயக்காமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கழிவுநீர் வெளியேற்ற லோடு ஒன்றுக்கு 1500 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் திருமழிசை, ஆவடி பகுதிகளுக்கு கொண்டு செல்வதால் சுங்கக்கட்டணம், வாகன டீசல், எரிபொருள் கட்டணம் என 10,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை செலவு ஏற்படுவதால் தங்கள் பகுதியிலேயே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து தரவேண்டும் என கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



    மேலும் இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்  போராட்டம் காரணமாக  வீடுகள் ஓட்டல்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவுநீரை உரிய முறையில் வெளியேற்ற முடியாமல் பொதுமக்கள் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது.

    செய்தியாளர் : பார்த்தசாரதி
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Thiruvallur

    அடுத்த செய்தி