சசிகலா வாங்கிய 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

சசிகலா தரப்பில் வாங்கிய 300 கோடி ரூபாய் மதிப்புள்ள மேலும் பல சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

சசிகலா வாங்கிய 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்
சசிகலா.
  • Share this:
2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, பினாமி பெயரில் சேர்த்ததற்காக, 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சசிகலாவின் சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியது. இந்த நிலையில் தற்போது பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ், சசிகலாவின் 65 சொத்துகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன.இந்தச் சொத்துகளை 2003ல் இருந்து 2005ம் ஆண்டு வரை ஹரிச்சந்தனி எஸ்டேட்ஸ் என்ற பெயரில் சசிகலா வாங்கியதாகவும், போயஸ் கார்டன், தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் பல்வேறு இடங்களில் 200 ஏக்கர் அளவிலான இந்தச் சொத்துகளின் மதிப்பு 300 கோடி ரூபாய் எனவும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்துகளை முடக்கியது தொடர்பாக விளக்கமளிக்க, பதிவுத்துறை அலுவலகங்களுக்கு சசிகலா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading