ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Exclusive | மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளால் சுருங்கிய வைகை - ஆதாரத்துடன் அம்பலம் 

Exclusive | மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளால் சுருங்கிய வைகை - ஆதாரத்துடன் அம்பலம் 

Exclusive | மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளால் சுருங்கிய வைகை - ஆதாரத்துடன் அம்பலம் 

மதுரை நகருக்கு உட்பட்ட வைகை ஆற்று பகுதியில் பல மீட்டர் அளவுக்கு நதி சுருக்கப்பட்டுள்ளது ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஸ்மார்ட் சிட்டி திட்டம் வைகையின் அகலத்தை பெரிதும் விழுங்கியிருப்பது தெரியவந்துள்ளது. தேனி மாவட்டத்தில் துவங்கும் மூல வைகையிலிருந்து கடலில் கலக்கும் ராமநாதபுரம் வரை வைகை ஆற்றில் அகலத்திற்கு எந்த ஆவணமும் பொதுப்பணித்துரை வசம் இல்லாத நிலையில், அதை கண்டறிவதற்கான பணியில் பொதுப்பணித்துறை, நில அளவைத்துறை, வருவாய் துறை இணைந்து குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை நகரில் வரும் வைகை ஆறு நாளுக்கு நாள் சுருங்கி வருவதாகவும், அதை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கில், அரசு தரப்பில் முக்கிய வரைபடம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

படிக்க....மதுரையில் கிராம பெண்களை பயன்படுத்தி ஆன்லைனில் பாலியல் தொழில்: அதிர்ச்சியூட்டும் கள ஆய்வு #News18Special

அதில் மதுரை நகரில் வைகை ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்களின் அடிப்படையில் மீட்டர் அளவில் கணக்கிடப்பட்ட நதியின் அகலம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சில ஆண்டுகளுக்கு முன் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பெறப்பட்ட அளவுடன் ஒப்பிடும் போது ஆற்றின் அகலம் கடுமையாக சுருக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளுக்கு வைகை ஆற்றின் அகலத்தை அதிகாரிகள் குறைத்துள்ளது தெரியவந்துள்ளது. அதற்கான ஆவணங்களும், வரைபடங்களும் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளது.

படிக்க...கோயில் வளாகத்தில் மளிகைக்கடை ஊழியர் கொன்று புதைப்பு.. பிரபல ஜோதிடர் கைது.

அதன் படி 350 மீட்டராக இருந்த விளாங்குடி பாலப்பகுதி தற்போது 306 மீட்டராக சுருங்கியுள்ளது. 300 மீட்டராக இருந்த ஆரப்பாளையம் அம்மா பாலப்பகுதி தற்போது 256 மீட்டராக குறைந்துள்ளது. 223 மீட்டராக இருந்த செல்லூர் பாலப்பகுதி தற்போது 179 மீட்டராக குறைந்துள்ளது. 320 மீட்டராக இருந்த ஆல்பர்ட் விக்டர் பாலம் 276 மீட்டராக கணிசமாக சுருக்கப்பட்டுள்ளது. 200 மீட்டராக இருந்த குருவிக்காரன் சாலை பாலப்பகுதி 156 மீட்டராகவும், அதிகபட்சமாக 403 மீட்டராக இருந்த அண்ணாநகர் பாலம் தற்போது 359 மீட்டராகவும் குறைந்துள்ளது.

மதுரை நகரின் இறுதி பகுதியாக விரகனூர் பாலப்பகுதி 358  மீட்டரிலிருந்து 314 மீட்டராக குறைந்து போயுள்ளது. வைகை ஆற்றின் இருபுறங்களிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு மேற்கொள்ளப்படும் பணிகளும், ஆக்கிரமிப்புகளுமே வைகை ஆற்றின் இந்த சுருக்கத்திற்கு முக்கிய காரணம்.

மேலும் படிக்க...தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

அதிகாரிகளே ஆற்றின் அளவை குறைத்து வருவது வறட்சியை மட்டுமே சந்தித்து வரும் மதுரையின் நீர் ஆதாரத்திற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும். அதனால் யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் நதியை மீட்டு நீர் வழிப்பதையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பார்பாக உள்ளது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Madurai, Smart City, Vaigai