பி.வி. சிந்துவை கடத்தி திருமணம் முடிப்பேன்... 70 வயது முதியவர் கலெக்டரிடம் மனு

Web Desk | news18
Updated: September 17, 2019, 5:50 PM IST
பி.வி. சிந்துவை கடத்தி திருமணம் முடிப்பேன்... 70 வயது முதியவர் கலெக்டரிடம் மனு
மலைச்சாமி | பி.வி.சிந்து
Web Desk | news18
Updated: September 17, 2019, 5:50 PM IST
முதியவர் ஒருவர் பிவி சிந்துவை மணமுடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்  உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமையன்று குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட 75 வயதான மலைச்சாமி என்ற முதியவர்  வித்தியாசமான கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
அதில், “எனக்கு கல்வி மற்றும் விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் உண்டு. ஆரம்பத்திலிருந்தே சர்வதேச விளையாட்டு வீராங்கனையாக இருந்து வரும் பி.வி.சிந்து வை மிகவும் பிடிக்கும் ஆகையால் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் நான் காதலை வளர்த்துக் கொண்டேன். பி.வி.சிந்துவை எங்கிருந்தாலும் தூக்கிக் கொண்டு வந்து திருமணம் செய்ய தயாராக இருக்கிறேன். ஆகவே எனக்கு திருமணத்தை நடத்தி தர மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் முழு ஒத்துழைப்பு வழங்கி திருமணத்தை நடத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

PV Sindhu, பி.வி.சிந்து
பி.வி.சிந்து


Loading...

மேலும், அந்த கோரிக்கை மனுவில் பிவி சிந்துவின் புகைப்படத்தையும் மலைச்சாமியின் புகைப்படத்தையும் ஒட்டி, இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும் பிவி சிந்துவை திருமணம் செய்ய தயாராக உள்ளேன்” என்றும் மலைச்சாமி தெரிவித்துள்ளார்.

வீடியோ பார்க்க: கோவிலில் பூஜை செய்யும் திருநங்கை

First published: September 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...