தமிழகத்தில் 7000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

தமிழகத்தில் 7000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளை பிரித்து, புதிய வாக்குச்சாவடியை ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறினார்.

 • Share this:
  தமிழகத்தில் ஏழாயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

  சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள் குறித்து, தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் வகையில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,

  வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்ய பிரதா சாஹூ, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளை பிரித்து, புதிய வாக்குச்சாவடியை ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறினார்.

  கடலூர் மாவட்டத்தில் 178 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த முறை 21 லட்சம் புதிய வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர் எனவும் சத்யபிரதா சாஹூ குறிப்பிட்டார்.
  Published by:Vijay R
  First published: