டாஸ்மாக் கடையில் புகுந்த சாரை பாம்பு... ஓட்டம் பிடித்த குடிமகன்கள்...

கோப்புப்படம்

திருத்தணி அருகே அரசு மதுபானக் கடையில் சுமார் ஏழு அடி நீளமுள்ள சாரைப் பாம்பு புகுந்ததால் மதுபானக் கடையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் மதுப் பிரியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

  • Share this:
    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த காசிநாதபுரம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுப் பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், திடீரென 7 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு கடைக்குள் புகுந்ததால் மதுபானக் கடையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் மதுபானம் வாங்க வந்தோர் பாம்பைக் கண்டு அலறி அடித்து ஓடினர்.



    பின்னர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் மதுபானக் கடையில் உள்ள ஏழு அடி நீளமுள்ள சாரைப் பாம்பை நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு பிடித்தனர். இதனால் அந்தக் கடையில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு நிலவியது. பிறகு, டாஸ்மாக் பணியாளர்களும் வாடிக்கையாளர்களும் தீயணைப்புத் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.
    Published by:Rizwan
    First published: