ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சேது சமுத்திரம் திட்டம்... முதலமைச்சர் கொண்டு வந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

சேது சமுத்திரம் திட்டம்... முதலமைச்சர் கொண்டு வந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

சட்டப்பேரவையில் தீர்மானத்தின்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவையில் தீர்மானத்தின்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

Sethusamudram Shipping Canal Project | ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம் என்று மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சேது சமுத்திர திட்டத்ததை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் அனைத்து கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சேது சமுத்திரம் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , “தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெறச் செய்வதற்கு மிக இன்றியமையாத திட்டமாக சேதுசமுத்திரத் திட்டம் விளங்கி வருகின்றது என்றார்.

1860-ஆம் ஆண்டு 50 லட்சம் ரூபாயில் Commander Taylor என்பவரால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது. அதன்பிறகு 1955-ல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர் டாக்டர் ஏ. இராமசாமி முதலியார் குழு. 1963-இல் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், 1964-ல் அமைக்கப்பட்ட டாக்டர் நாகேந்திரசிங் ஐ.சி.எஸ் தலைமையிலான உயர்நிலைக்குழு ஆகிய பொறியியல் வல்லுநர்களால் பல்வேறு ஆண்டு காலம் ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டதுதான் சேது சமுத்திரத் திட்டம் ஆகும். இதன் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் "Feasibility Study"-க்கு அனுமதியளித்தார்கள். அப்போதுதான் சேதுசமுத்திரத் திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப்பட்டது. பின்னர் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமரான டாக்டர் மன்மோகன்சிங் அவர்களால் 2004-ஆம் ஆண்டு 2,427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் , ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதலைவராக இருந்த சோனியா காந்தி அவர்களும் முன்னிலை வகிக்க இத்திட்டத்தை பிரதமர்  மன்மோகன்சிங் 2.7.2005 அன்று துவக்கி வைத்தார்கள்.

தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கனவு திட்டமான சேது சமுத்திரத் திட்டம் தொடர்புடைய வழக்கு நடந்து வருகிறது. மேலும் சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்துவோம் என்று மத்திய பாஜக அரசு சொல்லி இருக்கிறது.ஆனால் ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம் என்று மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இத்தகையை போராடியும் வாதாடியும் செயல்படுத்த வைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை இப்பேரவையின் சார்பில் நிறைவேற்றித் தர வேண்டும் என்று நான் கேட்டு கொள்கிறேன் என தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். மேலும் முதல்வர் கொண்டு வந்த சேது சமுத்திர திட்டத்ததை உடனடியாக நிறைவேற்றும் தீர்மானத்திற்கு எதிர்கட்சியான அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சி ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

First published:

Tags: CM MK Stalin, Sethusamudram Project, Tamilnadu government