Home /News /tamil-nadu /

வடகிழக்கு பருவமழைக்கான தொடர் நடவடிக்கை: 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்து அரசாணை வெளியீடு

வடகிழக்கு பருவமழைக்கான தொடர் நடவடிக்கை: 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்து அரசாணை வெளியீடு

சென்னையில் கனமழை

சென்னையில் கனமழை

வடகிழக்கு பருவமழைக்கான தொடர் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தோடு ஒருங்கிணைந்து செயல்பட 10 மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருகிறது, எனவே வெள்ள பாதிப்பு ஏற்படும் முன்னதாகவே நடவடிக்கை பணிகளை கண்காணித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ள திருச்சி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    குறிப்பாக திருச்சி மாவட்டத்திற்கு ஜெயகாந்தன் ஐ.எ.எஸ், ஈரோடு - பிரபாகர் ஐ.ஏ.எஸ், வேலூர் - நந்தகுமார் ஐ.ஏ.எஸ் கடலூர் - அருண் ராய் என பத்து மாவட்டங்களுக்கும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல், மாநில அளவிலான பணிகளை ஒருங்கிணைத்தல், நிவாரண பொருட்கள் வழங்குதல், பொதுமக்களை முகாம்களில் கொண்டு சேர்த்தல் உள்ளிட்ட பணிகளில் இந்த அதிகாரிகள் செயல்படுவார்கள் என்றும், ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மேற்கொள்ளும் பணியை நாள்தோறும் மின்னஞ்சல் மூலம் அறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Heavy rain, Rain

    அடுத்த செய்தி