தமிழ் டிவி சேனல்களில் ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. வித்தியாசமான கதைகள் மற்றும் சுவாரசியமான காட்சி அமைப்புகளுடன் திறமையான நடிகர் பட்டாளத்தை கொண்டு ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க தவறுவதில்லை. விதவிதமான ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் காமெடி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அதே நேரத்தில் இல்லத்தரசிகள், நடுவயதினர், முதியவர்கள் மற்றும் இளையவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் காலை துவங்கி இரவு தூங்க செல்லும் வரை அனைத்து முன்னணி சேனல்களிலும் சீரியல்கள் அணிவகுத்து நிற்கின்றன.
ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்ப புதுப்புது சீரியல்களை அவ்வப்போது களமிறக்குவதில் அனைத்து சேனல்களும் குறியாக இருக்கின்றன. ஒளிப்பரப்படும் சீரியல் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறதா இல்லையா என்பதை TRP ரேட்டிங் வைத்தே சேனல்கள் கண்டறிவதால் ஒரு சில சீரியல்கள் டைமிங் மாற்றி பார்க்கப்படும். அப்படியும் அந்த சீரியலுக்கு எதிர்பார்த்த TRP ரேட்டிங் கிடைக்கவில்லை என்றால் ஒரு சில வாரங்களில் அந்த சீரியலை முடித்து விட்டு வேறு ஒரு புதிய சீரியல் களமிறக்கப்படும்.
இதையும் படிங்க.. பிரபல நடிகையின் தம்பியா இவர்? பிக்பாஸ் போட்டியாளர் பற்றி வெளியான தகவல்!
ஆனால் தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று எதிர்பார்த்த TRP ரேட்டிங்கையும் பெற்று விடுகின்றன. ஒரு சில சீரியல்கள் தான் முடிய போகும் லிஸ்டில் இடம்பெறும். ரசிகர்களின் பேராதரவு பெற்ற சீரியல்களை ஒளிபரப்புவதில் மற்ற சேனல்களை விட நேரடி போட்டி என்றால் அது சன் டிவி-க்கும் - விஜய் டிவி-க்கும் தான். ஏனென்றால் இவற்றில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு தான் TRP பட்டியலில் கடும் போட்டி இருக்கும்.
இதையும் படிங்க.. பிக் பாஸ் அமீர் தனது தாயுடன் இருக்கும் புகைப்படம்.. கலங்கும் ரசிகர்கள்!
இதனிடையே விஜய் டிவி-யின் சீரியல்கள் TRP ரேட்டிங் பட்டியலில் சரிவை சந்தித்து உள்ளன. சமீபத்திய ஒட்டுமொத்த TRP ரேட்டிங்கின் படி சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் 11.21 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா 3 விஜய் டிவி சீரியல்களும் 11.4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளன. மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தில் சன் டிவி-யின் வானத்தை போல (10.75) மற்றும் சுந்தரி (10.43) சீரியல்கள் இருக்கின்றன.
ஐந்தாம் இடத்தில் சன் டிவி-யின் ரோஜா சீரியல் பிடித்துள்ளது. இரண்டாம் இடம் பிடித்துள்ள விஜய் டிவி-யின் 3 சீரியல்களும் ரசிகர்களின் பேராதரவு பெற்ற சூப்பர் ஹிட் சீரியல்கள் ஆகும். ஆனால் முதலிடம் பிடித்துள்ள கயல் சீரியல் கடந்த அக்டோபர் மாத இறுதி வாரத்தில் தான் துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.