குழந்தைகளுக்கு பிரத்யேக ஐ.சி.யு. வார்டு: கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்!

கொரோனா வார்டு

15 படுக்கைகள் கொண்ட இந்த வார்டில் குழந்தைகளுக்கு தேவையான வெண்டிலேட்டர், ஆக்சிஜன் வசதிகள்,  பல்ஸ் ஆக்சிமீட்டர் போன்ற கருவிகள் தயார் நிலையில் உள்ளன. மூன்றாவது அலை குழந்தகளை தாக்கலாம் என பேசப்படுவதால் தயாரிப்பாக இந்த வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் வகையில் குழந்தைகளுக்கான பிரத்தியேக ஐ சி யு வார்டு தயாராகிவருகிறது.

கொரோனா 2வது அலையின் பாதிப்புகள்  குறைந்துவரும்  நிலையில் மூன்றாவது அலை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்று கருதப்படுகிறது. மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கலாம் எனறு பேசப்பட்டு வரும் நிலையில், அதற்கான தயாரிப்பு ஏற்பாடாக ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தைகளுக்கு ஏற்றாற் போல வார்டில் அனைத்து புறமும் விலங்குகள் மற்றும் பொம்மைகளின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. குரங்கு, ஒட்டகசிவிங்கி, டால்பின், வரிக்குதிரை, சிங்கம் ஆகியவற்றின் வண்ணப்படங்களுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சை பிரிவு குழந்தைகளுக்கு நல்ல சூழலை ஏற்படுத்தி தரும் என ஓமந்தூரார் மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி கூறுகிறார்.

15 படுக்கைகள் கொண்ட இந்த வார்டில் குழந்தைகளுக்கு தேவையான வெண்டிலேட்டர், ஆக்சிஜன் வசதிகள்,  பல்ஸ் ஆக்சிமீட்டர் போன்ற கருவிகள் தயார் நிலையில் உள்ளன. மூன்றாவது அலை குழந்தகளை தாக்கலாம் என பேசப்படுவதால் தயாரிப்பாக இந்த வார்டு அமைக்கப்பட்டுள்ளது " என்று அவர் தெரிவித்தார்.

இந்த வார்டில் குழந்தை நல பேராசிரியர், துணை பேராசிரியர், மற்றும் செவிலியர்கள், முதுநிலை மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள். மூன்றாவது அலைக்கு முன்பாக குழந்தைகள் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மயக்க நிலையில் ஒரு குழந்தை வந்தால் உடனடியாக சிகிச்சை வழங்கவும் வசதிகள் உள்ளன என்று ஓமந்தூரார் குழந்தை நல பேராசிரியர் ஜெயக்குமார் கூறினார்.
கொரோனா வார்டு அல்லாமல் குழந்தைகளின் மற்ற சிகிச்சைகளுக்காக ஓம்ந்தூரார் அரசு மருத்துவமையில் 30 படுக்கைகள் கொண்ட வார்டு தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Murugesh M
First published: