தென்காசி மாவட்டம் ஆலங்குளம், தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய 3 இடங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பெண்கள் பலர் தங்கள் குழந்தைகளுடன் வருகின்றனர். அப்போது காவல் நிலையத்தைக் கண்டு குழந்தைகள் மிரட்சி அடையாமல் வீட்டில் இருப்பதுபோல் இயல்பாக இருப்பதற்காக இந்த விளையாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த அறையை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் திறந்துவைத்தார். குழந்தைகள் விளையாடுவதற்காக வாங்கி வைக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் அனைத்தையும் குழந்தைகளுக்கு விளையாட கொடுக்க வேண்டும், புகாரளிக்க வருவோரிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என மகளிர் காவலர்களுக்கு சுகுணா சிங் அறிவுரை கூறினார்.
Also read: விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிய மனைவி: சரமாரியாக கத்தியால் குத்திய கணவர் கைது
காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டுவைத்துவிட்டுப் பேசிய அவர், புளியங்குடி பகுதியில் குற்றச் செயல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வசதியாக நகரின் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார். அப்போது மகளிர் காவல் நிலைய காவலர்கள் உடன் இருந்தனர்.