ரேனிகுண்டாவை அடுத்த மாமண்டூர் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வெளிநாட்டில் இருந்த சொந்த ஊர் திரும்பியவர் உள்ளிட்ட 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
கடப்பா மாவட்டத்தில் உள்ள எஸ்.கே.தீனி கிராமத்தைச் சேர்ந்த கங்காதரன் குவைத்தில் வேலை செய்து வந்தார். இவர் விமானம் மூலம் நேற்றிரவு சென்னை வந்துள்ளார். மனைவி மற்றும் சகோதரர் குடும்பத்தினர், அவரை வரவேற்று, காரில் சொந்த ஊர் திரும்பினர்.
மாமண்டூர் அருகே கார் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த சிமெண்ட் லோடு ஏற்றிவந்த லாரி மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியதுடன், அதில் இருந்த கங்காதரன், அவரது மனைவி விஜயம்மா, சகோதரன் பிரசன்னா அவரது மனைவி மாரியம்மா மற்றும் பிரசன்னாவின் ஒன்றரை வயது குழந்தை என 5 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல திண்டுக்கல் அருகே நிகழ்ந்த மற்றொரு விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பெங்களூருவில் வந்த நண்பர்கள் வந்த கார் திண்டுக்கல் அருகே லாரி மீது மோதியது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நடைபெறும் திருமணத்துக்காக ரஹீஷ், லோகேஷ், பாபு மஞ்சுநாத் ஆகியோர் காரில் சென்றனர். மஞ்சுநாத் காரை ஓட்டியநிலையில், திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே முன்னாள் சென்ற லாரி மீது மோதியது. இதில், 4 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.