Home /News /tamil-nadu /

குட்கா வழக்கில் செந்தில் முருகன் லஞ்சம் பெற்றதற்கு ஆதாரம் உள்ளது: சிபிஐ

குட்கா வழக்கில் செந்தில் முருகன் லஞ்சம் பெற்றதற்கு ஆதாரம் உள்ளது: சிபிஐ

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்.

  • News18
  • Last Updated :
    குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதற்கு ஆதாரம் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.

    தடை செய்யபட்ட குட்கா பொருட்களை லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக விற்க அனுமதித்தது தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவுபடி, வழக்கு பதிவு செய்த சிபிஐ, தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரின் இல்லங்களில் சோதனை நடத்தியது.

    இதன் தொடர்ச்சியாக குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவராவ் மற்றும் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, மத்திய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன் ஆகியோரை கடந்த ஆகஸ்டு மாதம் சிபிஐ கைது செய்தது.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் முருகன், கடந்த 2013 முதல் 2015 ஆம் ஆண்டு வரை குட்கா தயாரிப்பாளர்களிடம் மாதம் இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதற்கு ஆதாரம் இருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மத்திய கலால் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியனின் ஜாமின் மனுவுடன் சேர்த்து இந்த வழக்கை விசாரிப்பதாக கூறி, செந்தில் முருகனின் ஜாமின் மனுவை 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: CBI, Food security department official, Gutkha Scam, Madras High court, Senthil Murugan, Two and half lakhs bribe

    அடுத்த செய்தி