ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

’அன்னைக்கு காலைல 6 மணி இருக்கும்...’ - அண்ணாமலையை ட்விட்டரில் கலாய்த்த செந்தில்பாலாஜி

’அன்னைக்கு காலைல 6 மணி இருக்கும்...’ - அண்ணாமலையை ட்விட்டரில் கலாய்த்த செந்தில்பாலாஜி

செந்தில் பாலாஜி, அண்ணாமலை

செந்தில் பாலாஜி, அண்ணாமலை

வாட்ச்சின் ரசீத் வெளியிடுமாறு கேட்டதற்கு திமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிட போகிறேன் என கூறியிருந்தார் அண்ணாமலை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அண்ணாமலை வாட்சின் விலை குறித்த வார்த்தை போர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே தீவிரமாகி வருகிறது.

வாட்ச் வாங்கியதற்கான ரசீதை அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலையை வெளியிடுமாறு கேட்டார். அதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியலுடன் வாட்ச் வாங்கியதற்கான ரசீதையும் சேர்த்து வெளியிடுவேன் என தெரிவித்தார்.

தான் மேற்கொள்ள இருக்கும் நடைபயணத்தின் போது முதல்வர், திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்து பட்டியல் என அனைத்தையும் வெளியிடுவதாக தெரிவித்தார். இதற்கு தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டர்ல் அண்ணாமலையை கடுமையாக சாடியுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “பில் இருக்கிறதா? இல்லையா என்று ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறோம். ஆம்/இல்லை என்பதுதானே பதிலாக இருக்க முடியும்? ஏப்ரலில் பட்டியல் வரும்…மே மாதம் வெய்யில் அடிக்கும் என்று எல்லாம் அளப்பதைப் பார்த்தால் ‘அன்னைக்கு காலையில் 6 மணி இருக்கும்…கோழி கொக்கரக்கோன்னு…’ என்பது போலவே இருக்கிறது” என்று பங்கமாக கலாய்த்துள்ளார்.

First published:

Tags: Annamalai, Rafale jets, Senthil Balaji, Twitter