முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஒருநாள்தான் இருக்கு.. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பு.. அமைச்சர் முக்கியத் தகவல்!

ஒருநாள்தான் இருக்கு.. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பு.. அமைச்சர் முக்கியத் தகவல்!

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு

இதுவரை 2.34 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன என்றும் இது மொத்தமுள்ள இணைப்புகளில் 87.44% ஆகும் என்றும் அமைச்சர் தகவல்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கடந்த டிசம்பர் 31ஆம் நாள் கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது. பிறகு ஜனவரி 31 ஆம் தேதி வரை இறுதிநாள் நீட்டிக்கப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

தற்போது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்னும் ஒருநாள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில், ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை விரைவில் இணைக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், நேற்று மாலை வரை 2.34 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

இது மொத்தமுள்ள 2.67 கோடி வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி & விவசாய இணைப்புகளில் 87.44% ஆகும். இதுவரை இணைத்திடாதவர்கள் விரைந்து இணைத்திட வேண்டுகிறேன்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Aadhar, EB Bill, Electricity bill