SENTHIL BALAJI GATHERED PEOPLE IN FRONT OF THE POLLING BOOTH AFTER BEING DENIED PERMISSION FOR THE FINAL ELECTION CAMPAIGN IN KARUR VAI
தேர்தல் பணிமனை முன்பு தொண்டர்களை குவித்த செந்தில் பாலாஜி...
செந்தில் பாலாஜி
கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு 10 இடங்களில் அனுமதி கேட்டதில், அனுமதி மறுக்கப்பட்டதால் தேர்தல் பணிமனை முன்பு பல்லாயிரக் கணக்கான தொண்டர்களை குவித்து தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
சட்டமன்ற பொதுத்தேர்தலில் கரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ., போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் போட்டியிடுவதால் தேர்தல் பிரச்சாரம் துவங்கியது முதல் அனல் பறக்கும் பிரச்சாரமாக இருந்தது. ஆங்காங்கே அடிதடி பிரச்சனைகள் தொடர்ந்தன.
இந்நிலையில் 4ம் தேதி தேர்தல் பிரச்சார இறுதி நாள் அன்று திமுகவினர், வெங்கமேடு, சர்ச் கார்ணர், ஜவகர் பஜார், லைட் ஹவுஸ் உள்ளிட்ட 10 இடங்களில் இறுதிக் கட்ட பிரச்சாரம் செய்து பணிமனை முன்பு பிரச்சாரத்தை நிறைவு செய்வதாக தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர்.
ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் மதியம் 3 மணிக்குள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தனது பிரச்சாரத்தை முடித்துவிட்டு 5 மணிக்கு கரூர் பேருந்து நிலையம் அருகே தலைமை தேர்தல் பணிமனை முன்பு பல்லாயிரக்கணக்கான மக்களையும், தொண்டர்களையும் குவித்து தனது இறுதி கட்ட பிரசாரத்தை முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிறைவு செய்தார். 100க்கும் மேற்ப்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.