• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • களிமண்... புண்ணியம்... திருட்டு மண்.. பாவம்... செந்தில்பாலாஜி - அண்ணாமலை - ட்விட்டரில் கடும் வார்த்தை போர்

களிமண்... புண்ணியம்... திருட்டு மண்.. பாவம்... செந்தில்பாலாஜி - அண்ணாமலை - ட்விட்டரில் கடும் வார்த்தை போர்

களிமண்... புண்ணியம்... திருட்டு மண்.. பாவம்... செந்தில்பாலாஜி - அண்ணாமலை - ட்விட்டரில் கடும் வார்த்தை போர்

களிமண்... புண்ணியம்... திருட்டு மண்.. பாவம்... செந்தில்பாலாஜி - அண்ணாமலை - ட்விட்டரில் கடும் வார்த்தை போர்

களிமண்ணை வைத்து பிள்ளையார் சிலை செய்து புண்ணியம் தேடலாம். திருட்டு மண்ணை வைத்து பாவம் மட்டுமே சம்பாதிக்க முடியும் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

  • Share this:
    பி.ஜி.ஆர் தனியார் நிறுவனத்திற்கு மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளதாகவும், இது தொடர்பான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன் என்று கூறிய பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தனியார் நிறுவனத்திற்கு சிறப்பு சலுகை வழங்குவது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து தெரியவில்லை என்றால் தெரிந்து கொண்டு பாஜக தலைவர் அண்ணாமலை பேச வேண்டும்.

    அவரை போல சமூக வலைதளத்தில் மட்டும் பணி செய்பவன் நான் இல்லை. பொது வாழ்வில் 25 ஆண்டுகளாக இருக்கிறேன். அண்ணாமலைக்கு அரசியலில் அரிச்சுவடி கூட தெரியாது. தலையில் களிமண் மட்டும் தான் உள்ளது. அரைவேக்காட்டுத்தனமாக ஆதாரமில்லாமல் கண்டபடி உளறி வருகிறார். அவருக்கு மண்டையில் சரக்கு ஒன்றும் இல்லை. 24 மணி நேரத்திற்குள் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை வழங்க வேண்டும், இல்லையென்றால் கட்டாயமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் கருத்துக்கு பதிலடி கொடுத்து பாஜக அண்ணாமலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



    அதில், மணல் திருடும் அமைச்சர் அவர்கள் என் மண்டையில் களிமண் என்கிறார். இருக்கட்டும், எனக்கு பெருமை தான், களிமண்ணை வைத்து பிள்ளையார் சிலை செய்து புண்ணியம் தேடலாம். திருட்டு மண்ணை வைத்து பாவம் மட்டுமே சம்பாதிக்க முடியும்! நினைவிருக்கிறதா 11 மணி 05 நிமிடம் வாக்குறுதி என்று அவர் தெரிவித்துள்ளார்.



    தொடர்ந்து, அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பதிவில், மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம், மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்' என்றார் பெரியார் என்ற கருத்தை குறிப்பிட்டு, படித்ததை உணர்ந்த நாள் என்று பதிவிட்டுள்ளார்.

    இப்படி, இருவருக்கும் இடையிலான வார்த்தை போர் கடந்த 2 நாட்களாக வலுத்து வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: