முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க திட்டம்.. முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை

மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க திட்டம்.. முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

ஆதார் எண் இணைப்பதன் மூலம் மானிய மின்சாரம் முறைகேடாக செல்வதை தடுக்க முடியும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மின் முறைகேட்டை தடுக்க ஆதார் எண் இணைக்கும் பணி துவங்கியுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் நிலக்கரி காணாமல் போனது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று லட்சம் டன் நிலக்கரி கடந்த ஆட்சி காலத்தில் காணாமல் போய் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளோம்.

அதன் அடிப்படையில் விரைவில் லஞ்ச ஒழிப்புத்துறை சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்’ என கூறினார். லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்க காரணம் குறித்த கேள்விக்கு, ‘மின்வாரியத்தில் உள்ள அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட உள்ளதால் எனவே மின் வாரியத்திலேயே புகார் அளிப்பது சரியாக இருக்காது. எனவே லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது’ என விளக்கம் அளித்தார்.

இதையும் படிங்க: அடுத்த மாதம் முதல் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்- அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

மேலும், ‘ஆதார் எண் இணைப்பதன் மூலம் மானிய மின்சாரம் முறைகேடாக செல்வதை தடுக்க முடியும். அதேபோல் மின் நுகர்வோர் விவரமும் நம்மிடம் இருக்கும் கடந்த ஆட்சியில் ஒரு கோடியே 15 லட்சம் தொலைபேசி எண்கள் மட்டுமே நுகர்வோரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.தற்போது மூன்று கோடி நுகர்வோர்களின் எண் நம்மிடம் உள்ளது விரைவில் ஆதார் எண் இணைப்பதன் மூலம் மின் இழப்பீட்டை தடுக்க முடியும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

First published:

Tags: Aadhaar card, EB Bill, Senthil Balaji