சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்த சேந்தமங்கலம் அதிமுக எம்.எல்.ஏ சந்திர சேகரன் அதிமுகவில் இருந்து நீக்கம்!

சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்த சேந்தமங்கலம் அதிமுக எம்.எல்.ஏ சந்திர சேகரன் அதிமுகவில் இருந்து நீக்கம்!

அதிமுக

தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ சந்திர சேகரன் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

  • Share this:
அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த சேந்தமங்கலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவான சந்திர சேகரன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் சந்திர சேகரன். இவர் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்காக அதிமுகவில் விருப்ப மனு அளித்திருந்தார். இருப்பினும் சந்திர சேகரனுக்கு பதிலாக சேந்தமங்கலம் தொகுதி வேட்பாளராக சந்திரன் என்பவரை அதிமுக அறிவித்தது.

தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ சந்திர சேகரன் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்த எம்.எல்.ஏ சந்திர சேகரனை அதிமுகவில் இருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கூட்டறிக்கை


இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப் பெயரும் உண்டாக்கும் விதத்தில், சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல், கழக வேட்பாளரை தோற்கடிப்பேன் என்று செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்துள்ள காரணத்தாலும், சந்திரசேகரன் எம்.எல்.ஏ இரு முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: