Home /News /tamil-nadu /

ஆர்.கே நகர் தொகுதியில் எம்.பி, எம்.எல்.ஏ காணவில்லை என்ற போஸ்டரால் பரபரப்பு

ஆர்.கே நகர் தொகுதியில் எம்.பி, எம்.எல்.ஏ காணவில்லை என்ற போஸ்டரால் பரபரப்பு

ஆர்.கே.நகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்

ஆர்.கே.நகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்

டிடிவி தினகரன் தொகுதி பக்கமே வராத நிலையில் இன்று வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆர்.கே நகர் தொகுதிக்கு உட்பட்ட காசிமேடு பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னை ஆர்.கே நகரில் எம்.பி எம்எல்ஏவை காணவில்லை என்ற போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகர்,ஜெஜெ நகர், கத்திவாக்கம் நெடுஞ்சாலை, உள்ளிட்ட பகுதிகளில் ஓர் முக்கிய அறிவிப்பு என்ற ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரையும் ஆர்,.கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரையும் கொரோனாவிற்கும் காணவில்லை, புயலுக்கும் காணவில்லை, மழைக்கும் காணவில்லை, காணவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் அவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என போஸ்டரில் ஒட்டப்பட்டுள்ளது. இப்படிக்கு ஆர்.கே நகர் தொகுதிக்கு உட்பட்ட அண்ணாநகர் வாக்காளர்களும், ஜெ.ஜெ.நகர் வாக்காளர்களும், எழில்நகர் வாக்காளர்களும், என பொறிக்கப்பட்டுள்ளது.

    டிடிவி தினகரன் தொகுதி பக்கமே வராத நிலையில் இன்று வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆர்.கே நகர் தொகுதிக்கு உட்பட்ட காசிமேடு பகுதியில் இன்று ஆய்வு மேற்கொள்ள வரும் நிலையில் அவரை காணவில்லை என்ற ஆர்.கே.நகர் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
    Published by:Vijay R
    First published:

    Tags: RK Nagar, TTV Dhinakaran

    அடுத்த செய்தி