• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? பள்ளிக்கல்வித்துறை அறிக்கையை மறுக்கும் அமைச்சர்

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? பள்ளிக்கல்வித்துறை அறிக்கையை மறுக்கும் அமைச்சர்

அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன்

  • Share this:
    5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு மையம் அமைக்கப்படும் என செப்டம்பர் மாதமே பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்ட நிலையில் அது தவறான தகவல் என்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    5 மற்றும் 8-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கட்டாயம் என மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. தமிழகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்வுக்கான பாட அட்டவணை, தேர்விற்கான விதிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வகுத்துள்ளது. அதில் மாணவர்கள் பயின்ற பள்ளியில் இல்லாமல் வேறு ஒரு தேர்வு மையத்தில் தேர்வெழுத ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது. செப்ட்ம்பர் 22-ம் தேதி வெளியான அறிவிக்கையில் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1 கிலோமீட்டர் தொலைவிற்குள்ளும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கிலோமீட்டர் தொலைவிற்குள்ளும் தேர்வு மையங்களை அமைக்க தொடக்கக் கல்வித்துறை இயக்குனரகம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

    இந்த அறிவிக்கையை முதன்மை கல்வி அலுவலர் திரும்பப் பெற்றதாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்த போது பொதுத்தேர்வு மையம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இது தவறான தகவல் என அமைச்சர் பதிலளித்தார்.

    பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிடுவதும், அதனை அமைச்சர் மறுப்பதும் இது முதல்முறை அல்ல. மாணவர்கள் கைகளில் சாதிக்கயிறு அணியும் விவகாரம் தொடங்கி, பிரதமர் உரையைக் கேட்க பொங்கல் விடுமுறையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று அண்மையில் கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு வரை அமைச்சர் செங்கோட்டையன் மாறி மாறி பேசி வருகிறார். இது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    Also see:


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: