ரஜினி ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? கேள்விகளை அடுக்கும் பழ. கருப்பையா

ரஜினி ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? கேள்விகளை அடுக்கும் பழ. கருப்பையா
பழ கருப்பையா (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: January 22, 2020, 12:18 PM IST
  • Share this:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பழ கருப்பையா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரஜினியைப் பார்த்து அச்சம் உள்ளது. அதனாலே, ரஜினி எது சொன்னாலும் அஞ்சுகின்றனர். ரஜினியின் கருத்துக்கு வலிமை இருந்தால் மக்களிடம் ஊடுருவி நிற்கட்டும், எதற்கு பயப்பட வேண்டும்.

கருத்தை கருத்தால் மட்டுமே தான் வெல்ல முடியும் என்றும் ரஜினிகாந்த் அவுட்லுக் பத்திரிக்கையில் வந்ததைத்தான் கூறினேன் என்று கூறுகிறார். அதற்கு ஏன் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால் முதலில் அவுட்லுக் பத்திரிக்கையைத் தான் மன்னிப்பு கேட்கச் சொல்ல வேண்டும்.

ரஜினி கூறிய கருத்திற்கு ஆம் செய்தோம் இனிமேலும் செய்வோம் என்று கூறாமல் திராவிட கழகம் கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்து ஏன் பின் வாங்குகிறது?. நாட்டில் எது பேசினாலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பொறுமை இல்லாத நிலைக்கு இந்த நாடு வந்துள்ளது.


ரஜினி கூறிய கருத்திற்கு மறுப்பு தெளிவாக சொன்னால் அத்துடன் அந்தக் கருத்து அடிபட்டு போய்விடும். எதற்காக மன்னிப்பு கேள் என்று ஏன் மிரட்ட வேண்டும். தங்களுடைய கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி மக்களின் மனதை மாற்றி அந்தக் கருத்துக்கு எதிரான கருத்தை உருவாகின்ற ஆளுமை இன்றைக்கு தலைவர்களிடம் இல்லை என்றும் கூறினார்.
First published: January 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading