சிவகங்கை மருத்துவ மாணவர்கள் வேற லெவல்... ஜூனியர்ஸ்க்கு ராகிங் இல்ல, ஸ்வீட்தான்...

இந்நிகழ்ச்சியில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்ற நிலையில் மூத்த மருத்துவ பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு ஏராளமான ஆலோசனைகளை வழங்கினர்.

Web Desk | news18
Updated: August 1, 2019, 9:47 PM IST
சிவகங்கை மருத்துவ மாணவர்கள் வேற லெவல்... ஜூனியர்ஸ்க்கு ராகிங் இல்ல, ஸ்வீட்தான்...
ராக்கிங்கை தவிர்த்து, இனிப்பு வழங்கிய சீனியர்ஸ்
Web Desk | news18
Updated: August 1, 2019, 9:47 PM IST
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங்கை தவிர்க்கும் விதமாக புதிய மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்ற மருத்துவக்கல்லூரி சீனியர் மாணவர்களின் செயல் பெற்றோர்கள் பலரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துவங்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆன நிலையில், மருத்துவ கலந்தாய்வு முடிந்து இந்த ஆண்டில் 100 மாணவர்கள் இக்கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்குகின்றன.

இந்நிலையில், புதிதாக வரும் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி கல்லூரி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்ற நிலையில் மூத்த மருத்துவ பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு ஏராளமான ஆலோசனைகளை வழங்கினர்.

மேலும், கல்லூரியில் பயிற்றுவிக்கும் முறைகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

இதனை தொடர்ந்து, கல்லூரியில் ராகிங்கை தவிர்க்கும் விதமாக சீனியர் மாணவர்கள் புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்பு அளித்தனர்.

Loading...

இது மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Also Watch: மனைவியிடம் மன்னிப்பு கேட்ட டம்மி ரவுடி..!

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...