இந்தியா முழுவதும் ஆட்சி செய்த
காங்கிரஸ் கட்சி, இப்போது இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் தோல்வியிலிருந்து மீளுமா என்பதே அனைத்து தரப்பின் கேள்வியாக உள்ளது.
நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. தேசிய கட்சியான காங்கிரஸ் இப்போது இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் அரசியல் பலத்துடன் விளங்குகிறது. 5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்தாண்டு முடிவில் குஜராத், இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் நடக்க உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்து வருவதாக விமர்சனம் எழுதுள்ளது.
அடிமட்டத்தில் உள்ள பிரச்சினைகளை காங்கிரஸ் களையாமல் இருப்பதும், பா.ஜ.க இந்துத்துவா என்ற ஆயுதத்தை எடுக்கும் போது, அதற்கான மாற்றை காங்கிரஸ் எடுக்காமல் இருப்பதும் தோல்விக்கான முக்கிய காரணம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். காங்கிரஸ் தன் பலவீனத்தை ஆராயாமல் இருப்பதும், தேர்தல் தோல்விகளுக்கான காரணங்களை சரி செய்வதற்கான பணிகளை தாமதமாக மேற்கொள்வதும் காங்கிரஸ் தோல்விக்கு முக்கிய காரணம் என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் கோட்டீஸ்வரன்.
அரசியலில் ஒவ்வொரு கட்சிக்கும் உயர்வு தாழ்வு என்பது இயல்பான ஒன்று. பா.ஜ.கவும் மிக மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. மதம், ஜாதி, உணர்வுபூர்வமான அரசியலுக்கு மத்தியில் பொதுவானதாக காங்கிரஸ் செயல்படுவது கடினமான ஒன்று. மாநிலங்களில் வெற்றி பெறும் கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து முதிர்ச்சியுடன் செயல்பட்டால் 2024 தேர்தலில் கடுமையான போட்டியை கொடுக்கலாம் என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ்.
நாடு முழுவதும் ஒரே மனநிலையில் மக்கள் இல்லாமல் இருப்பதும் பா.ஜ.கவிற்கும் சவாலாகத்தான் இருக்கும் என்கிறார் அவர்.
'தேர்தலில் தோல்வி அடையும் கலையை காங்கிரசிடம் கற்றுக் கொள்ளலாம்' : பாஜக அமைச்சர் அனுராக் தாகூர்
காந்தி குடும்பத்தைத் தாண்டி காங்கிரஸ் கட்சிக்கு எதுவும் இல்லை என்பது போல் பா.ஜ.க ஏற்படுத்தி இருக்கும் பிம்பத்தை மாற்றுவதோடு, கட்சியின் தலைமையை தீர்மானிப்பதில் தொடர்ந்து நிலவும் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.