நியூஸ் 18 தமிழ்நாடு - செய்தி ஒருங்கிணைப்பாளர் எஸ். திருநாவுக்கரசு காலமானார்

நியூஸ் 18 தமிழ்நாடு -  செய்தி ஒருங்கிணைப்பாளர் எஸ். திருநாவுக்கரசு காலமானார்
திருநாவுக்கரசு
  • News18
  • Last Updated: October 26, 2019, 10:51 AM IST
  • Share this:
மூத்த பத்திரிகையாளரும், நியூஸ் 18 தமிழ்நாடி தொலைக்காட்சியின் செய்தி ஒருங்கிணைப்பாளருமான எஸ். திருநாவுக்கரசு சென்னையில் மாரடைப்பால் நேற்று காலமானார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகேயுள்ள எரிசனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றியவர். தினமணி, தினமலர் உள்பட பல்வேறு முக்கிய நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார்.52 வயதான இவர் நேற்றிரவு, பணியில் இருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார். பழகுவதற்கு இனியவரும் எளியவருமான திருநாவுக்கரசு இளம்பத்திரிகையாளர்களை தொடர்ந்து ஊக்குவித்து வந்தவர். பல்வேறு அரசியல் தரப்பினரின் நன்மதிப்பை பெற்றவர்.

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் செய்தி ஒருங்கிணைப்பாளரும், காலத்தின் குரல் விவாத நிகழ்ச்சியின் விருந்தினர் ஒருங்கிணைப்பாளருமான எஸ்.திருநாவுக்கரசு (52) மாரடைப்பால் நேற்று காலமானார். பணியில் இருந்தபோதே இரவில் அலுவலகத்திலேயே மாரடைப்பால் மயங்கி சரிந்தார். அவருக்கு மனைவி ஜெயந்தி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். மந்தைவெளி தேவநாதன் தெருவில் உள்ள ரங்கா மருத்துவமனை பின்புறம் உள்ள இல்லத்தில் அவரது உடல் காலை 9 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள எரிசினம்பட்டி அவரது பூர்விக கிராமம் ஆகும். அவரது இறுதி நிகழ்ச்சி சொந்த ஊரான எரிசினம்பட்டியில் நடக்கிறது.

First published: October 26, 2019, 10:51 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading