தி.மு.கவைவிட்டு மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறுவார்கள் - மு.க.அழகிரி உறுதி

திமுகவில் மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறுவது நடந்தே தீரும் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

தி.மு.கவைவிட்டு மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறுவார்கள் - மு.க.அழகிரி உறுதி
மு.க.அழகிரி
  • Share this:
தி.மு.கவில் தலைவர் பதவி, பொதுச்செயலாளர், பொருளாளர் பதிவியைத் தொடர்ந்து துணைப் பொதுச் செயலாளர் பதவி மிக முக்கியமானது. தி.மு.கவிலுள்ள மூன்று பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்த வி.பி.துரைசாமி. திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் வி.பி.துரைசாமி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். தி.மு.கவின் 2006-2011 ஆட்சியில் துணை சபாநாயகராக பதவிவகித்தவர்.

கட்சியில் முக்கிய பதவியில் இருந்தஅவர், கடந்த மே மாதம் தி.மு.கவிலிருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். மேலும், தி.மு.க சாதிரீதியிலான பாகுபாட்டின் காரணமாக அங்கிருந்து விலகியதாக குற்றம்சாட்டினார். அவரைத் தொடர்ந்து, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம், பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்துப் பேசினார். அதன்பின்னர், பா.ஜ.க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து, அவர் தி.மு.க அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். கட்சி எம்.எல்.ஏ ஒருவர் பா.ஜ.கவுடன் நெருக்கமாக இருந்தது தி.மு.க தர்மசங்கமான நிகழ்வாக அமைந்தது.இந்தநிலையில், நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு மு.க.அழகிரி அளித்த பேட்டியில், ‘திமுகவில் மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறுவது நடந்தே தீரும். திமுகவில் பதவிதான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. அதே நேரத்தில் பதவி மட்டும் தான் அதிருப்தியை ஏற்படுத்தும் என கூற முடியாது. விரக்திக்கு வேறு பல காரணங்களும் உண்டு. தேர்தலுக்கு பின் தி.மு.க இன்னும் பலவற்றை சந்திக்கும். தி.மு.க vs பா.ஜ.க என்கிற கருத்து குறித்து பதில் கூற எதுவுமில்லை’ என்று தெரிவித்தார்.
First published: August 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading