ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொரோனா தடுப்பூசி போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய 80 வயது மூதாட்டிகள்

கொரோனா தடுப்பூசி போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய 80 வயது மூதாட்டிகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்

பிரதமர் மோடி அறிவுறுத்தியதன் தொடர்ச்சியாக இன்று முதல் வரும் 14ந்தேதி வரை கொரோனா தடுப்பூசி போடும் திருவிழா புதுச்சேரியில் தொடங்கியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

புதுச்சேரியில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி திருவிழாவில் 80 வயதுமிக்க 3 மூதாட்டிகள் ஆட்டோவில் இருந்த படியே ஊசி போட்டு மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. தினமும் 200 ஐ தாண்டிய தொற்று 300 ஐ நெருங்கும் வகையில் சென்றுள்ளது. இதன் மூலம் பாதிப்பு 44 ஆயிரத்தை தாண்டியது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ள நிலையில்

தொற்றின் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர புதிய கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் புதுச்சேரி நிர்வாகம் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்குவதை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள உணவக ஊழியர்கள், ஆட்டோ, டெம்போ, பேருந்து தொழிலாளர்கள், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் அதிகாரிகள் என அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி கடந்த 4 நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.

மேலும் கொரோனா தடுப்பூசி வழங்குவதை திருவிழாவாக கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியதன் தொடர்ச்சியாக இன்று முதல் வரும் 14ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் திருவிழா புதுச்சேரியில் தொடங்கியது.

அதன்படி அனைத்து அரசு பொதுமருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மற்றும் பள்ளி கல்லூரிகள் என 100க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்களில் 45 வயதுக்கும் மேற்பட்ட ஏராளமான பொதுமக்கள் மூத்த குடிமக்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்கின்னர்.

15 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரியில் இதுவரை 90 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த திருவிழா காலத்தின் போது 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மற்றவர்களுக்கு எடுத்து காட்டும் வகையில் 80 வயதை கடந்த குயவர்பாளையத்தை சேர்ந்த வேதவல்லி,வாசுகி,தனலட்சுமி ஆகிய மூன்று மூதாட்டிகள் பாக்குமுடையான்பேட்டை அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு ஆட்டோவில் வந்தனர். அவர்களை சிரமப்படுத்தாமல் சுகாதார ஊழியர்கள் ஆட்டோக்கள் அமர்ந்து இருக்கும்படியே செய்து தடுப்பூசி போட்டனர்.80 வயதை கடந்த இந்த மூதாட்டியர் அக்கறையோடு வந்து தடுப்பூசி போட்டு கொண்டது மிகப்பெரிய விழிப்புணர்வு என சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

Published by:Ramprasath H
First published:

Tags: Corona, Covid-19, Covid-19 vaccine, Pudhucherry