ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எடப்பாடியில் அணியில் இருந்து ஓ.பி.எஸ். முகாமுக்கு தாவிய முன்னாள் எம்பி… அதிமுகவில் மீண்டும் பரபரப்பு

எடப்பாடியில் அணியில் இருந்து ஓ.பி.எஸ். முகாமுக்கு தாவிய முன்னாள் எம்பி… அதிமுகவில் மீண்டும் பரபரப்பு

ஓபிஎஸ் - ஈபிஎஸ்

ஓபிஎஸ் - ஈபிஎஸ்

வழக்கு முடியும் வரையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  எடப்பாடி அணியில் இருந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு தாவியுள்ளார். இந்த சம்பவம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  அதிமுகவின் தலைமைப் பொறுப்பை கைப்பற்ற. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடந்து வருகிறது. கட்சிக்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என்று எடப்பாடி ஆதரவு நிர்வாகிகளும், இரட்டை தலைமை அல்லது ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என்று அவரது அணியை சேர்ந்த நிர்வாகிகளும், வலியுறுத்தி வருகின்றனர்.

  சமீபத்தில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுவில், இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்த நிர்வாகிகள், ஒவ்வொருவராக கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வந்தனர்.

  இதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நீதிமன்றத்தை நாடிய போது, கீழமை நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தீர்ப்பு வந்தது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது, ‘இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லுபடியாகும் என்று உத்தரவு வந்தது’.

  சர்ச்சையான ட்விட்டர் பதிவு : ’வெறிப்பிடித்து பேசுபவர்களுக்கு உரைக்கதான் அப்படி பதிவிட்டேன்’ ஹெச்.ராஜா புது விளக்கம்!

  இதன் தொடர்ச்சியாக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு முடியும் வரையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  முன்னாள் எம்.பி. மைத்ரேயன்

  இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அணியிலிருந்த கட்சியின் முக்கிய, மூத்த நிர்வாகியான முன்னாள் எம்.பி.மைத்ரேயன் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தாவி உள்ளார்.

  ஜெயலலிதா இருக்கும்போதே கட்சியின் முக்கிய நிர்வாகியாக மைத்ரேயன் வலம்வந்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினராக முதலில் இருந்த மைத்ரேயன், பாஜகவின் பொதுச் செயலாளராக 1995 முதல் 97 வரை பொறுப்பில் இருந்தார். பின்னர் துணைத்தலைவராக 1999 வரையிலும் கட்சியின் தலைவராக 2000 ஆண்டு வரையிலும் பொறுப்பிலிருந்தார்.

  ”திருக்குறளை முழுமையாக படிங்க” - ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திருக்குறளை அனுப்பி வைத்து போராட்டம்!

  இதன்பின்னர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் மைத்ரேயன் இணைந்தார். 2002 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக மைத்ரேயன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஓபிஎஸ் அணிக்கு தாவிய நிலையில், மைத்ரேயனை கட்சியை விட்டு  நீக்கி  எடப்பாடி தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Edappadi palanisamy, O Panneerselvam